கப்பக்கார் (நெல்)

கப்பக்கார் (Kappakar) என்னும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தின், வந்தவாசி வட்டராத்தில் உள்ள "தக்கண்டராபுரம்" எனும் நாட்டுப்புறப் பகுதியில் முதன்மையாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கருதப்படுகிறது.[1]

கப்பக்கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
150 - 160 நாட்கள்
மகசூல்
சுமார் 1350 கிலோ ஒரு ஏக்கர்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பருவகாலம் தொகு

மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 40 நாட்கள் நாற்றங்கால் காலத்துடன் 150 - 160 நாள் வயதுடைய நீண்டக்கால நெற்பயிரான கப்பக்கார் பயிரிடப்படுகிறது.[1] மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய இச்சம்பா பட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக கருதப்படுகிறது.[2]

வளருகை தொகு

நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர், களிமண் நிலம் மற்றும் நீர் சூழ்ந்த பரப்புகள் போன்ற வறட்சி நிலங்கள் இரண்டிற்கும் ஏற்று அதிக மகசூலைத் தரக்கூடியதாகும்.[1]

குறிப்புகள் தொகு

  • கப்பக்கார் சாகுபடி செய்ய, ஒரு ஏக்கருக்கு 50 கிலோ நெல் விதை தேவைபடுகிறது
  • கப்பக்காரின் அரிசி செம்பழுப்பு நிறத்தில் பெரு நயத்துடன் (தடித்து) காணப்படுகிறது.[1]
  • தென்னிந்திய உணவாக கருதப்படும் இட்லி, தோசை மற்றும் பொரி, அவல் போன்றவைகள் தயாரிக்க ஏற்றதாக உள்ளது. மேலும், பெண்களின் கர்ப்ப காலத்தில் நடத்தப்படும் ஒரு சடங்கான சீமந்தம் போன்ற காலங்களில் இந்த கப்பக்காரின் அரிசி முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.[3]

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Traditional Varieties grown in Tamil nadu - Kappakar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-21.
  2. பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "36. Kappakkar". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பக்கார்_(நெல்)&oldid=3722485" இலிருந்து மீள்விக்கப்பட்டது