கப்பா பப்படம்

கப்பா பப்படம் (Kappa pappadam) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த பல்வேறு வகையான பாப்படங்களுள் ஒன்றாகும். மலையாளத்தில் 'கப்பா' என்பது மரவள்ளிக்கிழங்கினை குறிப்பதாகும். இந்த அப்பளத்தின் மூலப் பொருள் மரவள்ளிக் கிழங்கு என்பதால் இது கப்பா பப்படம் எனப் பெயர்பெற்றது.

கப்பா பப்படம் Kappa Pappadam
P 20161008 144443 HDR
மாற்றுப் பெயர்கள்மரச்சீனீ/சீனி பப்படம்/அப்பளம்/மரவள்ளி பப்படம்
தொடங்கிய இடம்தென்னிந்தியா
பகுதிகேரளா, தமிழ்நாடு
முக்கிய சேர்பொருட்கள்மரவள்ளி

கப்பா பப்படம் வழக்கமாகச் சிற்றுண்டியாகவோ அல்லது அரிசி சார்ந்த உணவுக்குத் துணையாக வழங்கப்படுகிறது.

பகத் பாசில் நடித்து 2017ல் வெளிவந்த மலையாள திரைப்படம் ஒன்றிற்குக் கப்பா பப்படம் என்று பெயரிடப்பட்டுள்ளது.[1]

தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு

தொகு

இதன் முக்கிய மூலப்பொருட்களாக, மரவள்ளிக்கிழங்கு, சிவப்பு மிளகாய், மிளகுத்தூள், உப்பு, சீரகம் மற்றும் பெருங்காயம் கலந்து செய்யப்படுகிறது. கப்பா பப்படத்தின் சிறப்பானது இதன் பழுப்பு-ஆரஞ்சு நிறமாகும். இதற்குச் சிவப்பு மிளகாய்க் காரணமாகும். சிவப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயினைக் கலப்பதால் பப்படத்தின் சில வகைகள் வெள்ளை நிறத்தில் கிடைக்கின்றது.

மரவள்ளிக்கிழங்கு துண்டுகளாக்கப்பட்டு, மிளகாய், மிளகு, சீரகம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகப் பசைபோல செய்யப்படுகிறது. இந்த பசையுடன் உப்பு, பெருங்காயம், தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சேர்த்து கெட்டியாகும் வரை வேகவைக்கப்படுகிறது.[2]

பின்னர் இது சிறு சிறு துண்டுகளாக உருட்டப்பட்டு தட்டி எடுத்து துணி அல்லது பிளாஸ்டிக் தாளில் பரப்பி வெயிலில் காய வைக்கப்படுகிறது. பாரம்பரியமாக, பப்படங்களை உலர வைக்க வைக்கோல் பாய் பயன்படுத்தப்படுகிறது. சில மணி நேரம் கழித்து பப்பாடம்கள் திருப்பிடப்பட்டு உலர வைக்கப்படும். சூரிய ஒளியில் 2-3 நாட்களுக்கு உலரவைக்கப்படும் போது பப்படங்கள் மிருதாகின்றன. இந்நிலையில் இவை வறுத்தெடுக்கத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது.

உலர்ந்த பப்படங்கள் பின்னர் எண்ணெய்யில் வறுத்தெடுத்துப் பரிமாறப்படுகின்றன. நுண் அலைச் சாதனத்திலும் பப்படத்தினை பொரித்துச் சாப்பிடலாம்.

சேமிப்பு

தொகு

முற்றிலுமாக காய்ந்த பப்படங்களை ஒரு வருடத்திற்கும் மேலாகக் காற்று புகாத கொள்கலனில் சேமித்துப் பயன்படுத்தலாம். இந்த பப்படங்கள் கோடையில் மொத்தமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. சந்தையில் இந்தப் பப்படங்கள் 50-100 எண்ணிக்கைகொண்ட கட்டுகளாக விற்கப்படுகின்றன.

இடவாரியான வகைகள்

தொகு

மரச்சீனி அப்பளம் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் கப்பா பப்படத்தின் மாறுபாடாகும்.  சில வகைகளில் மரவள்ளிக்கிழங்குடன் அரிசியும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.  [ மேற்கோள் தேவை ]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பா_பப்படம்&oldid=3685061" இலிருந்து மீள்விக்கப்பட்டது