கமனாச்ரம
கமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம2 க3 ரி1 ஸ |
- பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் நேர் சுத்த மத்திம மேளம் சூர்யகாந்தம் (17).
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஜங்காரத்வனி, ரத்னாங்கி மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.
ஜன்ய இராகங்கள்
தொகுகமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை.