ரத்னாங்கி
ரத்னாங்கி கருநாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2 ஆவது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உண்டு.[1][2]
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க1 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க1 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
தொகு- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் ஜலார்ணவம் (38) ஆகும்.
- இதன் ரிஷப, மத்திம சுரங்கள் முறையே கிரக பேதத்தின் வழியாக கமனச்ரம (53), ஜங்காரத்வனி (19) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
- இந்த மேளத்தில் சில ஜன்ய இராகங்கள் உண்டு.
ஜன்ய ராகங்கள்
தொகுஜன்ய ராகங்கள் |
---|
கண்டாரவம்[3] |
பேனத்யுதி [4] |
ஸ்ரீ மணி |
உருப்படிகள்
தொகுவகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | சிறீ தக்ஷிணாமூர்த்திம் | முத்துசுவாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | தருணம் இதே | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
- ↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
- ↑ ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர் (2012). சென்னை-28: கானாம்ருத பிரசுரம். p. 157-164 [கர்னாடக ஸங்கீத சாஸ்திரம் [https://www.ganamruthaprachuram.com/book-list கர்னாடக ஸங்கீத சாஸ்திரம்]].
{{cite book}}
: Check|url=
value (help); Missing or empty|title=
(help); Unknown parameter|tittle=
ignored (help)CS1 maint: location (link) - ↑ Guru-Guha