கமலாபதி அரண்மனை

கமலாபதி அரண்மனை (Kamalapati Palace) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரின் பெரிய மற்றும் சிறிய ஏரிக்கு இடையிலுள்ள பாலத்தில் அமைந்துள்ளது. 1722ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இதற்கு ஜின்னோர்கரின் தலைவரான நிஜாம் ஷாவின் விதவை இராணி கமலாபதியின் பெயரிடப்பட்டது . இந்த அரண்மனையை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தேசிய முக்கியத்துவம் வாய்த இடமாக வகைப்படுத்தியுள்ளது.

கமலாபதி அரண்மனை
Map
பொதுவான தகவல்கள்
நகரம்போபால்
நாடுஇந்தியா
ஆள்கூற்று23°15′03.4″N 77°23′52.51″E / 23.250944°N 77.3979194°E / 23.250944; 77.3979194

இடம்

தொகு

கமலாபதி அரண்மனை, போபாலின் கமலா பூங்காவிற்குள் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இந்த அரண்மனை போஜ்பால் என்று அழைக்கப்படும் பண்டைய ஏரியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது பரமாரப் பேரரசின் ராஜ்புத் மன்னர் போஜ் (கி.பி 1010-1055) என்பவரால் கட்டப்பட்டது. இதிலிருந்து தற்போதைய போபாலின் பெயர் பெறப்பட்டது. ஆனால் இந்த இடம் முதலில் கோண்டு ஆட்சியாளர்களின் கீழ் முக்கியத்துவம் பெற்றது. [1] கி.பி 1722 இல் ஜின்னோகரின் தலைவரான நிஜாம் ஷாவின் விதவையான இராணி கமலாபதியால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக தற்போதுள்ள கட்டமைப்பு உள்ளது. இந்த அரண்மனையின் மேற்குப் பகுதியில் நவீன போபாலுக்கு அடித்தளம் அமைத்த போபாலின் சர்தார் தோஸ்த் முகமது கான் (கி.பி. 1708-1726) என்பவரால் கட்டப்பட்ட மலையின் பதேஹ்கர் கோட்டையின் எச்சங்கள் உள்ளன. அரண்மனை பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமகால மதச்சார்பற்ற கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மேலும், போபால் நகரத்தின் ஆரம்பகால உதாரணமாகவும் திகழ்கிறது. இந்த இரட்டை மாடி கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நினைவுச்சின்னம் 1989ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலாபதி_அரண்மனை&oldid=3166571" இலிருந்து மீள்விக்கப்பட்டது