தோஸ்த் முகமது கான்

தோஸ்த் முகமது கான் (Dost Mohammad Khan) (1657–1728) மத்திய இந்தியாவில் போபால் இராச்சியத்தை நிறுவியவராவார்.[1] இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான[2] நவீன நகரமான போபாலை நிறுவினார்.[3]

தோஸ்த் முகமது கான்
தாய்மொழியில் பெயர்دوست محمد خان ميرازي خېل
பிறப்பு1657
தெரா, பன்காஷ் மாவட்டம், முகலாயப் பேரரசு (தற்போதைய பாக்கித்தான்)
இறப்பு1728
பதேகர், போபால்
23°15′N 77°25′E / 23.25°N 77.42°E / 23.25; 77.42
முன்னிருந்தவர்None (Position Established)
பின்வந்தவர்சுல்தான் முகமது கான்
சமயம்இசுலாம்
வாழ்க்கைத்
துணை
மெஹ்ராஜ் பீபி
பதா பீபி
தாஜ் பீபி
இராணுவப் பணி
சார்புமுகலாயப் பேரரசு
சேவை/கிளைபோபாலின் நவாப்
தரம்சோவார், பௌஜ்தார், சுபேதார்
போர்கள்/யுத்தங்கள்முகலயா-மராட்டியப் போர்கள்

ஆரம்ப ஆண்டுகள் தொகு

தெரா பகுதியைச் சேர்ந்த ஒரு பஷ்தூன் இனத்தவரான[4][5] தோஸ்த் முகமது கான் 1703இல் தில்லியில் முகலாய இராணுவத்தில் சேர்ந்து மிகச் சீக்கிரமாகவே தனது பணிகளில் உயர்வு பெற்றார். மத்திய இந்தியாவின் மால்வா மாகாணத்தில் நியமிக்கப்பட்டார். பேரரசர் ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு, அரசியல் ரீதியாக நிலையற்ற மால்வா பிராந்தியத்தில் இருந்த பல உள்ளூர் தலைவர்களுக்கு இவர் கூலிப்படை சேவைகளை வழங்கத் தொடங்கினார். 1709 ஆம் ஆண்டில், மரேல்கரின் சிறிய ராஜ்புத்திர ஆட்சியாளாருக்கு கூலிப்படையாக பணியாற்றும் போது, பெரேசியா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தார். விசுவாசமான கூட்டாளிகளின் குழுவை உருவாக்க இவர் தனது பஷ்தூன் உறவினர்களை மால்வாவுக்கு அழைத்தார். [6] மங்கல்கரை அதன் மற்ற ராஜ்புத் அண்டை நாடுகளிடமிருந்து வெற்றிகரமாகப் பாதுகாத்து, அதன் அரச குடும்பத்தில் திருமணமும் செய்து கொண்டார். மேலும் அதன் வாரிசில்லா இராணியின் மரணத்திற்குப் பிறகு அரசையும் கைப்பற்றினார்.. [7]

போபாலை நிறுவுதல் தொகு

முகலாயப் பேரரசுக்கு எதிரான கிளர்ச்சியில் மால்வாவின் உள்ளூர் ராஜ்புத் தலைவர்களுடன் பக்கபலமாக இருந்தார். அடுத்தடுத்த போரில் தோற்கடிக்கப்பட்டு காயமடைந்த அவர், காயமடைந்த சையத் சகோதரர்களில் ஒருவரான சையத் உசேன் அலிகான் பர்ஹாவுக்கு உதவினார். முகலாய அரசவையில் மிகவும் செல்வாக்கு மிக்க சையத் சகோதரர்களின் நட்பைப் பெற இவருக்கு உதவியது. அதைத் தொடர்ந்து, இவர் மால்வாவில் உள்ள பல பிரதேசங்களை தனது மாநிலத்துடன் இணைத்தார். கான் ஒரு சிறிய கோண்டு இராச்சியத்தின் ஆட்சியாளரான இராணி கமலாபதிக்கு கூலிப்படை சேவைகளை வழங்கினார். இதற்கான பணத்துக்குப் பதிலாக அப்போது ஒரு சிறிய கிராமமாக இருந்த போபாலைப் பெற்றார். இராணி இறந்த பிறகு, அவர் மகனைக் கொன்று கோண்டு இராச்சியத்தை இணைத்தார்.[8] 1720களின் முற்பகுதியில், இவர் போபால் கிராமத்தை ஒரு வலுவான நகரமாக மாற்றினார். மேலும் நவாப் என்ற பட்டத்தையும் வைத்துக் கொண்டார். இது இந்தியாவில் சுதேச மாநிலங்களின் முஸ்லிம் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டது..[9]

சையித் சகோதரர்களுக்கு கான் அளித்த ஆதரவு இவருக்கு போட்டியாளரான முகலாயப் பிரபு நிசாம் உல் முல்கின் பகைமையைப் பெற்றது. மார்ச் 1724 இல் நிசாம் போபால் மீது படையெடுத்தார். கான் தனது பெரும்பகுதியை விட்டுக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டார். தனது மகனை பணயக்கைதியாக விட்டுவிட்டு நிசாமின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார். [6]

இறுதிக் காலம் தொகு

தனது இறுதி ஆண்டுகளில், கான் ஆன்மீகத்தை நோக்கிய சூபித்துவ மாயவாதிகள் மற்றும் புனிதர்களிடமிருந்து உத்வேகம் பெற்றார். இவரும் இவரது ஆட்சிக் காலத்தில் போபாலில் குடியேறிய பிற பஷ்தூன்களும், போபாலின் கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலைக்கு பதான் மற்றும் இசுலாமிய செல்வாக்கைக் கொண்டு வந்தனர்.

இவரது ஆட்சிகாலத்தின் உச்சத்தில், போபால் மாநிலம் சுமார் 7,000 சதுர மைல் (18,000 கிமீ 2) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.[10] கான் இறந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த அரசு 1818இல் பிரித்தானியர்களின் கீழ் வந்தது. மேலும், இது 1949ஆம் ஆண்டு வரை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படும் வரை தோஸ்த் முகமது கானின் சந்ததியினரால் ஆளப்பட்டது.

இறப்பு தொகு

தோஸ்த் முகமது கான் மார்ச் 1728 இல் ஒரு நோயால் இறந்தார். இவர் பங்கேற்ற பல்வேறு சண்டைகள் மற்றும் போர்களில் இருந்து இவரது உடலில் 30 காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. [6] இவர் தனது மனைவி பத்தா பிபிக்கு அருகில் பதேஹ்கர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dost Mohammad Khan (Bhopal)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. John Falconer; James Waterhouse (2009). The Waterhouse albums: central Indian provinces. Mapin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89995-30-0. 
  2. Fodor's India, Nepal and Sri Lanka, 1984. Fodor's. 1984. பக். 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-679-01013-5. 
  3. "The remarkable Begums who defied patriarchal norms to rule Bhopal for more than a century".
  4. "Bhopal". Encyclopædia Britannica Online. (2011). Encyclopædia Britannica Inc.. அணுகப்பட்டது 4 November 2011. 
  5. Waltraud Ernst, தொகுப்பாசிரியர் (2007). India's princely states: people, princes and colonialism. Routledge studies in the modern history of Asia (Volume 45) (illustrated ). Routledge. பக். 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-41541-5. https://archive.org/details/indiasprincelyst00erns. 
  6. 6.0 6.1 6.2 William Hough (1845). A brief history of the Bhopal principality in Central India. Calcutta: Baptist Mission Press. பக். 1–4. இணையக் கணினி நூலக மையம்:16902742. https://archive.org/details/abriefhistorybh01houggoog. 
  7. Kamla Mittal (1990). History of Bhopal State. Munshiram Manoharlal. பக். 2. இணையக் கணினி நூலக மையம்:551527788. 
  8. Jogendra Prasad Singh; Anita Dharmajog (1998). City planning in India: a study of land use of Bhopal. Mittal Publications. பக். 28–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-705-4. 
  9. Somerset Playne; R. V. Solomon; J. W. Bond; Arnold Wright (1922). Arnold Wright. ed. Indian states: a biographical, historical, and administrative survey (illustrated, reprint ). Asian Educational Services. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-1965-4. 
  10. Shahryar Khan (2000). The Begums of Bhopal (illustrated ). I.B.Tauris. பக். 1–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86064-528-0. https://archive.org/details/begumsofbhopaldy0000khan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோஸ்த்_முகமது_கான்&oldid=3794435" இலிருந்து மீள்விக்கப்பட்டது