பெரேசியா
பெரேசியா (Berasia) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும் நகராட்சியுமாகும்.
பெரேசியா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°38′N 77°26′E / 23.63°N 77.43°E | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | போபால் |
ஏற்றம் | 484 m (1,588 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 24,289 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 463106 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐஎன்-எம்பி |
வாகனப் பதிவு | எம்பி |
வரலாறு
தொகு18 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரேசியா ஒரு சிறிய குத்தகைத் தோட்டமாக தில்லியைச் சேர்ந்த முகலாய நிலப்பிரபுவான தாஜ் முகமது கான் என்பவரின் கீழ் இருந்தது. நெடுஞ்சாலை கொள்ளையர்களிடமிருந்து வழக்கமான தாக்குதல்களால் இது மிகவும் பாதிக்கப்பட்டது. ஆப்கானிய வம்சாவளியைச் சேர்ந்த கூலிப்படையினரான முகலாய சிப்பாயான தோஸ்த் முகமது கான், 30,000 ரூபாயை ஆண்டுதோறும் செலுத்தி பெரேசியாவை குத்தகைக்கு எடுத்தார். [1] பின்னர் அவர் பல அண்டை பிரதேசங்களை இணைத்து போபால் மாநிலத்தை நிறுவினார்.
பின்னர், இந்த மாவட்டம் தார் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது, ஆனால் 1860ஆம் ஆண்டில் இந்தியக் கிளர்ச்சியில் சேவைகளுக்கான வெகுமதியாக போபாலுடன் மீண்டும் இணைக்கப்பட்டது. [2]
நிலவியல்
தொகுபெரேசியா 23.63 ° வடக்கிலும் 77.43 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [3] இதன் சராசரி உயரம் 484 மீட்டர் (1,587அடி) ஆகும்.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு,[4] பெரேசியாவில் 24,289 என்ற அளவில் மக்கள் தொகை இருந்தது. இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் உள்ளனர். பெரேசியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 57% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; ஆண்களில் 60% ,பெண்கள் 40% கல்வியறிவு பெற்றவர்கள். மக்கள்தொகையில் 18% 6 வயதுக்குட்பட்டவர்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ S.R. Bakshi and O.P. Ralhan (2007). Madhya Pradesh Through the Ages. Sarup & Sons. pp. 380–383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-806-7.
- ↑ Imperial Gazetteer Of India (1908). Central India.
- ↑ Falling Rain Genomics, Inc - Berasia
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.