கமலா சகானி (Kamala Sohonie) (1912–1998) ஓர் இந்திய உயிர்வேதியியலளர் ஆவார். அறிவியல் புலத்தில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற இந்தியப் பெண்மணி இவரே.[1][2]

கமலா சகானி
Kamala Sohonie
பிறப்பு1912
இறப்பு1998
தேசியம்இந்தியர்
துறைஉயிர்வேதியியல்
கல்வி கற்ற இடங்கள்மும்பை பல்கலைக்கழகம், மும்பை
அறியப்படுவதுமுதல் இந்தியப் பெண் அறிவியலாளர்
துணைவர்எம். வி. சகானி

இளமை

தொகு

கமலா சகானி 1912 இல் பிறந்தார். இவரதந்தையார் நாராயன ராவ் பாகவதர் ஒரு வேதியியலாலர். கமலா பம்பாய் (மும்பை) பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் வேதியியல்லும் இள்வல் பட்டம் பெற்றார். இவர் ஆய்வு உதவிக்காக இந்திய அறிவியல் கழகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவரது விண்ணப்பம் அன்றைய இயக்குநர் சி. வி. இராமனால் பெண்களுக்கு ஆராய்ச்சி தகுதி இல்லையென ஏற்கப்படவில்லை.[1] பின்னர் ஓராண்டுக்கு இவர் தகுதிகாண் நிலையில் வைக்கும் கட்டுத்தளையோடு அங்கே ஆய்வு செய்ய ஏற்கப்பட்டுள்ளார்.[3]

வாழ்க்கைப்பணியும் ஆய்வும்

தொகு

இராமனின் கட்டுத்தளைகளையேற்று 1933 இல் இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியேற்றுள்ளார். இவ்ரது வழிகாட்டி சிறீ. சிறீனிவாசய்யா. பேர. இராமன் இவரது தகுதி கண்டு வியந்து மேலும் தொடர்ந்து ஆய்வில் தொடர ஏற்பு அளித்துள்ளார். இவர் உணவுப்பொருள்களில் உள்ள புரதங்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது இவருக்கு உயிர்வேதியியல் முதவர் பட்டத்திற்கு வழிவகுத்துள்ளதுnd. பிறகு இவர் முனைவர் டெரிக் இரிச்சுட்டரின் க்கிழ் ஆய்வு செய்ய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர் உயிர்வேதியியலாலர் இராபின் கில்லிடம் ஆய்வு செய்து உயிர்க்கல நொதியான சைட்டொகுரோம் சி யைக் கண்டுபிடித்துள்ளார்.[4] இந்த ஆய்வுக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்து இவர் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் ஆய்வு முடிபுகள் சுருக்கமாக 40 பக்கங்கள் அளவில் அமைந்தது.

கமலா 1939 இல் இந்தியாவுக்குத் திரும்பினர். இவர் புது தில்லி சீமாட்டி ஆர்டிஞ்சே மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் அமர்த்தப்பட்ட்டார். பின்னர், குன்னோர் ஊட்டச் சத்து ஆய்வகத்தில் பணிபுரிந்தார்.[4] சகானியை 1947 இல் மண்ந்த பிறகு, இவர் பம்பாய்க்கு (மும்பைக்கு) இடம்பெயர்ந்தார். பாமாய் அரசு அறிவியல் நிறுவனத்தில் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார. அங்கு இவர் பருப்புகளின் ஊட்டக் கூறுபாடுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இவர் குழந்தைகளுக்கன அரிய ஊட்டச் சத்தான நீரா பற்றிய ஆய்வுக்காக குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார்.[4] இவர் பங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் இயக்குராக பணிபுரிந்துள்ளார்.

கமலா சகானி புது தில்லி இந்திய மருத்துவாஅராய்ச்சி மன்றம் நிகழ்த்திய விழாவில் பாராட்டப்பட்டுத் திரும்பியதும் உடல்நல்ம் குலையவே விரைவில் இரப்பெய்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Gupta, Aravind. "Kamala Sohonie" (PDF). Indian National Science Academy. பார்க்கப்பட்ட நாள் 19 October 2012.
  2. "The Glass Ceiling: The why and therefore" (PDF). Vigyansagar. Government of India. Archived from the original (PDF) on 6 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Kamala Sohonie". Streeshakti. பார்க்கப்பட்ட நாள் 19 October 2012.
  4. 4.0 4.1 4.2 Dhuru, Vasumathi. "The scientist lady" (PDF). Indian Association of Scientists. பார்க்கப்பட்ட நாள் 19 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_சகானி&oldid=4028417" இலிருந்து மீள்விக்கப்பட்டது