கமலா நேரு பூங்கா, மும்பை
கமலா நேரு பூங்கா (Kamala Nehru Park, Mumbai) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின், மும்பையில் உள்ள தொங்கு தோட்ட வளாகத்தின் ஒரு பகுதியாகும். இது தோராயமாக 16,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. (4 ஏக்கர்). மும்பையின் மலபார் மலையின் உச்சியில் அமைந்துள்ள இது பெருநகரமும்பை மாநகராட்சியின் நீர் மேலாண்மை பொறியியல் துறையால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மும்பையின் முதன்மையான தோட்டங்களில் ஒன்றான இது இளம் குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது. தோட்டத்தில் மும்பை கடற்கரை உலாச்சாலைக் காட்சிகளை காணலாம். இது இராணியின் மாலை என்றும் அழைக்கப்படுகிறது.
தேர் வாஸ் ஏன் ஓல்டு ஹூ லிவ்டு இன் எ ஷூ என்ற குழந்தைகள் பாடலால் ஈர்க்கப்பட்டு காலணி அமைக்கப்பட்டது. [1] பெருநகரமும்பை மாநகராட்சியின் முன்னாள் சுற்றுச்சூழல் அதிகாரி சோலி அர்சிவாலா கமலா நேரு பூங்காவில் இந்த காலணியை வடிவமைத்திருந்தார்.[1][2]
வரலாறு
தொகு1952 இல் நிறுவப்பட்ட கமலா நேரு பூங்கா பல தசாப்தங்களாக மும்பையின் நகர்ப்புற நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய ஜவகர்லால் நேருவின் மனைவியுமான கமலா நேருவின் நினைவாக இந்தப் பூங்காவுக்குப் பெயரிடப்பட்டது.[3]
புதுப்பித்தல்
தொகு2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், பெருநகரமும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் 22 பிப்ரவரி 2018 அன்று பூங்கா புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.[4][3]
'குழந்தைகள் பாடல் ' என்ற கருப்பொருளைத் தொடர்ந்து பூங்காவில் இப்போது மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு குழந்தைகள் பாடல்கள் கருப்பொருளாகக் கொண்டு கூடுதல் இடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
காலணி வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இடம் , 2000
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Mumbai: Soli Arceivala, the man who designed the Old Woman s Shoe at Kamala Nehru Park, dies at 91". mid-day. 2017-11-22. https://www.mid-day.com/articles/mumbai-soli-arceivala-the-man-who-designed-the-old-womans-shoe-at-kamala-nehru-park-dies-at-91/18761170.
- ↑ "Mumbai: The old woman s shoe, Kamla Nehru Park opens for visitors after one year". mid-day. 2018-02-22. https://www.mid-day.com/articles/mumbai-the-old-womans-shoe-kamla-nehru-park-opens-for-visitors-after-one-year/19099173.
- ↑ 3.0 3.1 "Revamped Kamala Nehru Park with 'Old Woman’s Shoe' opens after a year". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/mumbai/revamped-kamala-nehru-park-with-old-womans-shoe-opens-after-a-year/articleshow/63035397.cms.
- ↑ "Times of India article on re opening of the garden post refurbishing".