மும்பையின் தொங்கும் தோட்டங்கள்
மும்பையிலுள்ள தொங்கும் தோட்டங்கள் (Hanging Gardens of Mumbai) பெரோசா மேத்தா தோட்டங்கள் என்றும் அழைக்கப்படும் இது மலபார் மலை உச்சியில், அதன் மேற்குப் பகுதியில், கமலா நேரு பூங்கா எதிரே அமைந்துள்ளது.[1][2] இவை அரபிக்கடலின் மீது சூரியன் மறையும் காட்சிகளை வழங்குகின்றன. மேலும் விலங்குகளின் வடிவங்களில் செதுக்கப்பட்ட ஏராளமான வேலிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1881 ஆம் ஆண்டில் உல்காசு கபோகர் என்பவரால் மும்பையின் பிரதான நீர்த்தேக்கத்தின் மீது வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது. அருகிலுள்ள அமைதியின் கோபுரத்தில் ஏற்படும் மாசு நடவடிக்கையால் தண்ணீரை மறைப்பதாக சிலர் கூறுகின்றனர். வான் வழியே பார்க்கும்போது, பூங்காவின் உள்ளே உள்ள நடைபாதை (தொங்கும் தோட்டங்கள் பாதை) பி. எம். ஜி (பெரோசா மேத்தா கார்டன்ஸ்) என்ற எழுத்துக்களை காணலாம்.
புகைப்படங்கள்
தொகு-
மும்பையின் தொங்கும் தோட்டத்தில் ஒரு வாசல்
-
மும்பையின் தொங்கும் தோட்டத்தில் உள்ள நீரூற்றுகள்
-
மலபார் மலையில் தொங்கும் தோட்டம், சுமார் 1991
-
தொங்கும் தோட்டங்கள்
-
பூங்காவில் புதர்கள்
-
மலபார் மலையில் தொங்கும் தோட்டம், சுமார் 1905
-
மும்பையின் தொங்கும் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியக் கடிகாரம்
-
மும்பையின் தொங்கும் தோட்டத்தில் உள்ள கல் தகடு,பெரோசா மேத்தாவின்தோட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mumbai: Soli Arceivala, the man who designed the Old Woman s Shoe at Kamala Nehru Park, dies at 91". mid-day. 2017-11-22. https://www.mid-day.com/articles/mumbai-soli-arceivala-the-man-who-designed-the-old-womans-shoe-at-kamala-nehru-park-dies-at-91/18761170.
- ↑ "Mumbai: The old woman s shoe, Kamla Nehru Park opens for visitors after one year". mid-day. 2018-02-22. https://www.mid-day.com/articles/mumbai-the-old-womans-shoe-kamla-nehru-park-opens-for-visitors-after-one-year/19099173.