கமல் ராம் (Kamal Ram), VC (17 டிசம்பர் 1924 – 1 சூலை 1982) பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் படைப்பிரிவின் 8வது அணியில் பணியில் சேர்ந்த படை வீரர் ஆவார். இவர் இராஜபுதனம் முகமையில் இருந்த கரௌலி மாவட்டத்தின் போலுபுரா கிராமத்தில் பிறந்தவர்.[1]

கமல் ராம்
26 சூலை 1944 அன்று மன்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் கமல் ராமுக்கு வழங்கிய விக்டோரிய கிராஸ் பதக்கம்
பிறப்பு(1924-12-17)17 திசம்பர் 1924
போலுபுரா, இராஜபுதனம் முகமை, பிரித்தானிய இந்தியா
இறப்பு1 சூலை 1982(1982-07-01) (அகவை 57)
போலுபுரா, கரௌலி மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
சார்பு இந்தியா
 இந்தியா
சேவை/கிளைஇந்தியத் தரைப்படை
சேவைக்காலம்194?-1972
தரம்கௌரவ லெப்டினண்ட்
படைப்பிரிவுபஞ்சாப் படைப்பிரிவின் 8வது அணி
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
  • இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் நாஜிகளுக்கு எதிரான போர்
விருதுகள், விக்டோரியா கிராஸ்


கமல் ராம் பெயர் பொறிக்கப்பட்ட இலண்டன் போர் நினைவிடம்

இரண்டாம் உலகப் போரின் போது, இவர் போர்க்களத்தில் இத்தாலியில் முகாமிட்டிருந்த ஜெர்மனியின் நாஜிப் படைகளுக்கு எதிராக வீரமாக போராடி, நேசப்படைகளின் முன்னேற்றத்திற்கும், நாஜிப்படைகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக செயல்பட்டவர். போரில் இவரது வீரதீரச் செயல்களைப் பாரட்டி, 26 சூலை 1944 அன்று, ஐக்கிய இராச்சிய மன்னர் ஆறாம் ஜார்ஜ், கமல் ராமுக்கு உயரிய விக்டோரிய கிராஸ் பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தினார்.[2]

இந்திய விடுதலைக்குப் பின்னர் கமல் ராம் தொடர்ந்து இந்திய தரைப்படையில் பணியாற்றியனா. 1972-ம் ஆண்டில் கமல் ராம் பணி ஓய்வு பெறும் போது கௌரவ லெப்டினண்ட் அதிகாரியாக ஓய்வு பெற்றார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Kamal Ram VC". Archived from the original on 2021-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  2. "Sepoy Kamal Ram VC". nationalarchives.gov.uk. Archived from the original on 8 December 2010. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  3. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 12 December 1964. p. 503. 
  4. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 7 March 1970. p. 313. 

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_ராம்&oldid=3620304" இலிருந்து மீள்விக்கப்பட்டது