கம்குல்

இந்திய வனவிலங்கு சரணாலயம்

கம்குல் (Gamgul) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டம் சலூனி தாலுக்காவில் அமைந்துள்ள ஓர் உயரமான வனவிலங்கு சரணாலயம் ஆகும். பந்தல் பள்ளத்தாக்கில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச்சரணாலயம் [2] சம்மு காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தின் வடக்கு முனையுடன் இணைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் காசுமீர் மான் இடம்பெற்றுள்ள ஒரே சரணாலயம் இதுதான் என்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கம்குல்
Gamgul
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of கம்குல் Gamgul
Map showing the location of கம்குல் Gamgul
கம்குல்
இமாச்சல பிரதேசத்தில் அமைவிடம்
அமைவிடம்சம்பா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்32°50′49″N 76°04′05″E / 32.847°N 76.068°E / 32.847; 76.068[1]
பரப்பளவு109 km2 (42 sq mi)
நிறுவப்பட்டது1962

கம்குல் சரணாலயம் கத்தூரி மான்கள், இமாலய வரையாடு மற்றும் வண்ணக் கோழிகள் போன்ற உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. மேலும், இப்பகுதியில் பல வண்ணமயமான பறவைகளை காணலாம். தாவரங்கள் உயரமான பகுதிக்கு பொதுவானது, மேலும் நிலப்பரப்ப்பில் தேவதாரு காடுகள், ஊசியிலையுள்ள காடுகள் மற்றும் ஆல்பைன் மேய்ச்சல் நிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Gamgul Siahbehi Sanctuary". protectedplanet.net.
  2. "World Species : Protected Area : Gamgul Siahbehi Sanctuary". worldspecies.org. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்குல்&oldid=3650448" இலிருந்து மீள்விக்கப்பட்டது