கம்பில்யா

தெற்குப் பாஞ்சாலத்தின் தலை நகரம்

கம்பில்யா என்பது பாஞ்சால இராச்சியத்தின் தலைநகரம் ஆகும். பாஞ்சால இராச்சியம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மகாஜனபாதம் ஆகும். கம்பில்யா தெற்குப் பாஞ்சாலத்தின் தலைநகரமாகவும், அகிச்சத்ரா வடக்குப் பாஞ்சாலத்தின் தலைநகரமாகவும் திகழ்ந்தன.[1] மகாபாரதக் காலத்தின் போது, துருபதரால் கம்பில்யா ஆளப்பட்டது.

வரலாறு

தொகு

கம்பில்யா மற்றும் மகந்தி என்ற பெயரால் முன்னர் அழைக்கப்பட்ட இந்த இடத்தின் வரலாறானது, சைன சமயத் தீர்த்தங்கரரான விமலநாதரின் காலங்களில் இருந்தே நிலைத்திருக்கிறது. சூரிய குல மன்னரான அரிசேனரின் பிறந்த இடமும் இதுவாகும். சைன சமயப் பகவான் நேமிநாதரின் காலத்தின் போது மன்னர் துருபதரால் இந்தத் தலைநகரமானது ஆளப்பட்டது. இந்த இடத்தில் உள்ள தெய்வங்கள் குப்தர் காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகின்றன.

உசாத்துணை

தொகு
  1. Malik, Dr Malti (2016). History of India (in ஆங்கிலம்). New Saraswati House India Pvt Ltd. p. 51-54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7335-498-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பில்யா&oldid=3645214" இலிருந்து மீள்விக்கப்பட்டது