விமலநாதர்

விமலநாதர் (Vimalnath), சமண சமயத்தின் 13வது தீர்த்தங்கரர் ஆவார். சமணச் சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் கிருதவர்மனுக்கும், இராணி சியாமாவிற்கும் காம்பில்யம் நகரத்தில் பிறந்த விமலநாதர், கர்மத் தளைகளைக் கடந்து சித்த புருஷராக விளங்கியவர். இவர் தற்கால ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[1][2]

விமலநாதர்
Vimalanatha
விமலநாதரின் சிற்பம்
அதிபதி13வது தீர்த்தங்கரர்

பொன்னிற மேனியுடைய விமலநாதரின் வாகனம் பன்றி ஆகும். உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பண்டைய காம்பில்யம் நகரத்தில் உள்ள சமணக் கோயிலில் விமலநாதருக்கு தனிச் சன்னதி உள்ளது.

படக்காட்சியகம்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Lord Vimalnath". 2017-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-10-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. Vimalnath Bhagwan

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலநாதர்&oldid=3602868" இருந்து மீள்விக்கப்பட்டது