கம்போடிய இனப்படுகொலை
கம்போடியா இனப்படுகொலை (Cambodia Genocide) தென்கிழக்கு ஆசியா நாடான கம்போடியாவில் 1975–1979[1] இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில், கெமர் ரூச் என்ற கட்சியின் ஆட்சிக்காலத்தில், போல் போட்[2] தலைமையில் "பிரதர் நம்பர் டூ" என்று அழைக்கப்பட்ட நுவோன் சிசீயெ, கேகியூ சம்பான், மற்றும் அப்போதைய ஆட்சியின் வெளியுறவுதுறை அமைச்சரான இயங்சரே ஆகியோர்களால் இனப்படுகொலைகள் அரங்கேறியதாக அறியப்பட்டது.
கெமர் ரூச் கால படுகொலை
தொகு1975-1979 களில் கெமர் ரூச் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்த போல் போட், ஆட்சிக்காலத்தில் வியட்நாம் மக்கள் கம்போடியாவிற்கு பிழைப்பிற்காகவும், இருப்பிடம் தேடியும் புலம்பெயர்ந்ததாக தெரிகிறது. அம்மக்களை, ஆட்சியாளர்கள் தகுதியற்ற பணிநியமனதாலும், கட்டாய பணியமர்த்தி,[3] பலமணிநேரம் இடைவிடாது பணிசுமைக்கு அலாக்கப்பட்டதாகவும் மூலாதாரங்கள் உள்ளன. இதுபோன்ற பல விடயங்களுக்கு ஆட்சியாளர்களை எதிர்த்து போராடிய மக்களை சிறையிலடைத்து சித்திரவதை செய்தும் பசி பட்டினி மற்றும் சட்டவிரோதமான படுகொலைகள் என கெமர் ரூச்சீன் போல் போட் தலைமையில் (கம்போடிய அரசாங்கம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி) கிட்டத்தட்ட 1 மில்லியனிலிருந்து- 2 மில்லியன் அல்லது 1½ மில்லியனிலிருந்து- 3 மில்லியனுக்கும் (வேறுபட்ட மூலத்தகவல்படி) மேற்பட்ட மக்களை படுகொலை செய்யப்பட்டதாக ஆதாரங்களால் அறியப்பட்டது. ஒரு கெமர் ரூச் தலைவர்தான், கொலைகள் தொடங்கிய "மக்களின் சுத்திகரிப்பு"க்கான காரணம் என்று கருதபடுகிறது. [4]2001 சனவரி 2 ஆம் திகதி கெமர் ரூச் தலைமை கம்போடியா அரசாங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டத்தை இயற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2009 பிப்ரவரி 17 ஆம் திகதியன்று அதற்கான சோதனையை தொடகியது.[5] 2014 ஆகத்து 7ல், நுவோன் ச்சியே(Nuon Chea) மற்றும் கெகியு சம்பான் (Khieu Samphan) போன்றோர்களுக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும், நடந்தேறிய இனப்படுகொலைக்காகவும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
சித்தாந்தம்
தொகுசித்தாந்தத்தின்படி, இவ்வினப்படுகொலை ஒரு முக்கிய பங்கு வகித்தது. கேம் ரூச் விரும்பியது, எந்த ஒரு அயல்நாட்டு உதவியையும் நம் தேசத்தில் அனுமதிக்க கூடாது என்கிற போக்கும், ஆட்சியாளர்களின் மோசமான கண்ணோட்டதினாலும், செல்வாக்கை பயன்படுத்தி தேசமக்களையும், புலம்பெயர்ந்த மக்களையும், கடுமையான வேளாண்மை பணிகளில் ஈடுபடுத்தி தனது நாட்டினை மீட்டெடுக்க முனைந்த விதமே இந்த இனபடுகொலைக்கு முக்கிய காரணியாக அமைந்தது.[6] [7] பென் கியெர்னன் (Ben Kiernan) ஒப்பிடும் மூன்று இனப்படுகொலை வரலாற்றில், ஆர்மீனியா படுகொலை, பெரும் இன அழிப்பு மற்றும் கம்போடிய இனப்படுகொலை இதில் எது என்றாலும் பகிரப்பட்ட தனித்துவமான சில அம்சங்கள் பொதுவானவை. அவை இனவாதம் ஒன்றாகும், மற்றும் மூன்று ஆட்சியின் தத்துவத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது, மூன்று குற்றவாளிகளும் மதச்சார்பற்று இருந்தாலும்கூட அவர்கள் மத சிறுபான்மையினரையே இலக்காக இருந்துள்ளது.[8]
மோசமான இனபடுகொலை
தொகுகெமர் ரூச் அதிகார ஆட்சியில், பொல்பாட் கொள்கைகளால் நகர்ப்புற மையங்களிலும் முகாம்களிலும் தஞ்சமடைந்திருந்த மக்களை, கட்டாய இடமாற்றம், சித்திரவதை, அதிக உழைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, வெகுசன கொலைகள் போன்ற அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித (முழுமையாக 2 மில்லியன்) மக்கள் உயிரிழக்க நேரிட்டது.
இறுதிக்கட்ட விசாரணை
தொகு20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனபடுகொலையாக சித்தரிக்கும் இச்சம்பவ குற்றவாளிகளின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியால் கம்போடியா சர்வதேச தீர்ப்பாயத்தில் போர் குற்றம் புரிந்ததாக விசாரணை நடந்துவருகிறது. குற்றவாளிகளாக கருதப்படும், போல் போட், இயங்சாரே ஆகியோர் இறந்து விட்டதால் எஞ்சிய நௌவான்சியா, கெகியூசம்பான் ஆகியோர் மீது 30 ஆண்டுகால விசாரணை நடந்துவந்த நிலையில் 2014ல் ஆகத்து 7ம் திகதி இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பு
தொகுஇறுதிவிசாரணை நடந்துமுடிந்த அதேநாளில் (ஆகத்து 7 2014), நீதிபதி நீல்நௌன் என்பவரால் தீர்ப்பு வாசிக்கப்பட்டது அதில், போர் குரற்றவாளிகலாக அறியப்பட்ட நௌவான்சியா (88), கெகியூசம்பான் (83) ஆகியோர் மிகப்பெரிய ஒரு இனப்படுகொலை நடத்தி மனிதாபிமானமின்றி கொன்றுகுவித்துள்ளனர் எனவே அவர்கள் ஆயுள்வரை சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது.
இவற்றையும் காண்க
தொகுசான்றாதாரங்கள்
தொகு- ↑ Cambodia 1975–1979
- ↑ The Pol Pot Files, 1975–1977
- ↑ பிபிசி-தமிழ்-நாள்: 27 ஜூன், 2011 - பிரசுர நேரம் 16:43 ஜிஎம்டி
- ↑ International Law and Cambodian Genocide: The Sounds of Silence
- ↑ [Mendes, Errol (2011). Peace and Justice at the International Criminal Court: A Court of Last Resort. Edward Elgar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84980-382-3.]
- ↑ Alvarez 2001, ப. 50.
- ↑ Alvarez 2007, ப. 16.
- ↑ https://www.youtube.com/watch?v=2hs-ySv_-AA Cambodia Genocide – Khmer Rouge Regime (Pol Pot Years) Reveals Published on May 10, 2015]