கம்போடிய இனக்குழுக்கள்
கம்போடியா இன குழுக்களில் (Ethnic groups in Combodia) பெரிய இனக்குழுவாகக் காணப்படுவது கெமர் இனமாகும். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 90% உள்ளனர். இவர்கள் முதன்மையான வாழிடம் தாழ்நில மீகாங் துணைப்பகுதி மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளாக இருந்தன. மீகாங் நதிக்கு அருகில் தெற்கு கோராட் பீடபூமியில் இருந்து தொடங்கும் ஒரு தொடர்ச்சியான வில் போன்ற நிலப்பகுதியில் கெமர் இன மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இப்பகுதியில் நவீன கால தாய்லாந்து லாவோசு மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் வடகிழக்கில் சந்திக்கின்றன. தொன்லே சாப் ஏரியில் இருந்து ஏலக்காய் மலைகள் வரையிலும் உள்ள நிலப்பகுதி தென்மேற்கில் நீண்டு பின்னர் தென்கிழக்காக மீண்டும் தொடர்ந்து தென்கிழக்கு வியட்நாமில் உள்ள மீகாங் ஆற்றின் முகத்துவாரம் வரையிலும் காணப்படுகிறது.
அரசியல் மற்றும் சமூக ஆதிக்கம் மிகுந்த கெமெர் இனக்குழுவைத் தவிர மற்ற கம்போடியா இன மக்களை, " பழங்குடியின சிறுபான்மையினர்" அல்லது " பழங்குடியினர் அல்லாத சிறுபான்மையினர்" என்று வகைப்படுத்தப்பட்டிருந்தனர் மேலும் உள்நாட்டு பழங்குடியின சிறுபான்மையினரை பொதுவாக கெமர் லோயு (மேட்டுநிலக் கெமர்) என்று அழைத்தனர். இவர்கள் பெரும்பாலும் ரத்தாநாக்கிரி, மாண்டுல்கிரி மற்றும் சிடங் திரங் போன்ற மிகச்சிறிய மலைப்பிரதேச மாகாணங்களில் கணிசமாக வாழ்ந்தனர். தோராயமாக கம்போடியாவில் 17 முதல் 21 வரையிலான தனி இனக்குழுக்கள் காணப்பட்டன, அக்குழுக்கள் பெரும்பாலும் கெமர் மொழியுடன் தொடர்புடைய தெற்காசிய மொழிகளைப் பேசினர். இவர்கள் குயி மற்றும் தம்புவன் மொழிகள் உள்ளிட்ட கெமர் லோயு குழுவினர் எனப்பட்டனர். இத்தகைய மக்களை அந்நிலப்பகுதியில் வாழ்வதற்குரிய தொன்மையான பழங்குடியினராக கெமர் இனத்தவர் கருதினர். ரேடு மற்றும் யாராய் என்ற இரு மேட்டு நிலக்குழுவினரும் சாம் மக்கள் எனப்பட்டனர். பண்டைய சாம் பகுதியில் இருந்து வந்த இவர்கள் தெற்காசிய மொழிகளைப் பேசினர். இவர்கள் கெமர் இனத்தவர் கலாச்சாரத்துடன் ஒன்றுபடாமல் அவர்களுடைய பாரம்பரிய ஆவியுலக நம்பிக்கைகளைப் பின்பற்றினர்.
கெமெர் மக்களுடன் மக்களாக குடியேறி, குறைந்தபட்சம் பெயரளவிலாவது கெமெர் கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர்கள் பூர்வீகர்களல்லாத இனச் சிறுபான்மையினர் எனக்கருதப்பட்டனர். பெரும்பாலும் சேர்க்கப்பட்டுள்ளது மூன்று குழுக்களாக சீன கம்போடியர்கள், வியட்நாமியர்கள், சாம் மக்கள் ஆகிய மூன்று இனக்குழுவினரே பெரும்பாலும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். கம்போடியா வரலாறு முழுவதிலும், சீனநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சீனர்கள் கம்போடியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். கம்போடிய சமூகத்துடன் ஒன்றுபட்டு இன்று சீன கம்போடியர்கள் அல்லது கம்போடியர்களாகவே கலந்துவிட்ட சீன-கெமெர் வம்சாவளியைச் சார்ந்த இவர்கள் இன்று கம்போடியாவில் வர்த்தகச் சமூகம், அரசியல் மற்றும் செய்தி ஊடகத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பா பேரரசில் நிகழ்ந்த பல்வேறு போர்களில் இருந்து மீண்டு அகதிகளாக வந்த வம்சாவளியினர் சாம் மக்களாவர். மத்திய சம்வெளிப்பகுதிகளில் தெராவாடா புத்தசமயத்தைத் தழுவி வாழ்ந்த கெமர் மக்களுடன் மக்களாக வாழ்ந்தாலும் இவர்களில் பெரும்பாலோர் இசுலாம் சமயத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர்[1]
இவர்களைத் தவிர சில இதர சிறுபான்மையினர்களும் இங்கு வாழ்ந்தனர். வடகிழக்கு எல்லையில் தாய்லாந்தின மக்களுடன் மீகாங்க், லாவோ இனக்குழுவினரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். நகர்புற மற்றும் கிராமப்புற தாய்லாந்தின மக்களும் பர்மிய கோலா இனக்குழுவினரும் தோற்றத்தில் பாய்லின் மாகாணத்து கலாச்சார அடையாளங்களுடன் காணப்பட்டனர். லாவோ எல்லையில் சமீபத்திய இனக்குழுவினரான மொங் இனத்து புலம்பெயர்ந்தவர்களும் பல்வேறு வகை பர்மிய மக்கள், தலைநகரமான புனோம் பென்னிலும் வாழ்கின்றனர்.
கெமர் இனக்குழு
தொகுதென்கிழக்கு ஆசியாவில் கணக்கிடப்பட்ட மன் மக்கள் வாழ்ந்த அதே காலகட்டத்தில், இப்பகுதியில் வாழ்ந்திருக்கும் மிகப் பழமையான இன குழுக்களில் ஒன்று கெமர் இனக்குழு ஆகும். பெரும்பாலான தொல்பொருள் மற்றும் மொழியியல் மற்றும் மொழியறிவியல் மற்றும் பயிர் நிபுணர்கள் போன்ற மற்ற நிபுணர்களின் ஆய்வு முடிவுகளின்படி, இக்குழுவினர், கி.மு 2000 இல் அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக அரிசி சாகுபடி விவசாய முறைகளை நடைமுறையில் தெரிந்தவர்களாக இருந்துள்ளனர் என நம்பப்படுகிறது. இவர்களே பின்னாளில் 802 ஆம் ஆண்டில் கெமர் பேரரசை கட்டியெழுப்பக் காரணமாக இருந்துள்ளனர். அப்பேரரசு தென்கிழக்கு ஆசியாவில் ஆறு நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. தற்பொழுது கம்போடிய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற பிரதானமான அரசியல் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கெமர் இன மக்கள் தங்கள் மொழிக்காக உருவாக்கிய முதலாவது எழுத்து இன்றும் தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதையொட்டி பின்னர் அவர்கள் தாய் மற்றும் லாவோ மொழிகளுக்கான எழுத்துகளை உருவாக்கினர். வடகிழக்கு தாய்லாந்து, தென்கோடியிலுள்ள லாவோசு, கம்போடியா மற்றும் தெற்கு வியட்நாம் பகுதிகளில் உள்நாடு மற்றும் பாதுகாப்பு எல்லை வரை தொடர்ச்சியாக கெமர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பெரும்பாலான தொல்லியல் அறிஞர்கள், இன ஒப்பாய்வியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் கெமர் இனத்தினர் மீகாங் நதியின் கிளைநதி ஒன்றுக்கு நெருக்கமான தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
மொழி, வரலாறு, கலாச்சாரம் ஆகிய கூறுகளால் தாங்கள் இணைக்கப்பட்ட ஓரினம் என்று கெமர் மக்கள் தங்களை நினைத்தனர். ஆனால், தேசியத்தின் அடிப்படையில் அவர்கள் மூன்று பிரதான இனக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். கெமர் மொழியைப் பேசும் கம்போடிய கெமர்கள் ஒருவகையினராகும். கெமர் பேரரசில் வாழ்விடம் கொண்டு ஆனால் தற்போது தாய்லாந்தின் ஒரு பகுதியாகிவிட்ட நிலப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களான சூரின் கெமர்கள் இரண்டாவது வகை கெமர் இனமக்கள் ஆவர். இவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வட்டார மொழியைப் பெற்றிருந்தனர் என்றாலும் தாய்லாந்திய மொழியான இசன் மொழியைச் சரளமாகப் பேசினர்.
கம்போடிய கெமர்களுடன் நெருக்கமான உறவைப் பேணி திருமணத்தின் காரணமாக கம்போடியாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் கெமர் குரோம் என்ற மூன்றாவது வகையினராகும். இதே போல கெமர் பேரரசில் வாழ்ந்து வந்த பழங்குடியினரின் வாழ்விடங்கள் தற்போது வியட்நாமின் ஒரு பகுதியாகிவிட்டவர்களும் கெமர் குரோம்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். கெமர் மற்றும் வியட்நாமிய வட்டார மொழிகள் இரண்டையும் பேசிய இவர்கள் கம்போடியாவில் நிரந்தரமாக குடியேறி வசிக்கின்றனர். வியட்நாம் கமியூனிசத் துன்புறுத்தல் மற்றும் கட்டாய ஒருங்கிணைப்பு முதலியன இதற்கான காரணங்களாகும்.
மூன்று வகை கெமர் இனத்தினரும் தங்களுக்குள் நல்லதொரு புரிதலுடன் இருந்திருக்கின்றனர், கம்போடிய கெமர் மொழியானது அதன் சுற்றுப்புறப் பகுதி மொழி கொண்ட மொழிகளான தாய், வியட்நாமிய மொழி, லாவோ மொழிகள் போலன்றி தொனியற்ற மொழியாக விளங்கியது. இதனால் கெமர் சூரின் மற்றும் கெமர் குரோம் இனத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cambodia Ethnic Groups". Cambodia-travel.com. Archived from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
இவற்றையும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- Center for Advanced Study (ed): Ethnic Groups in Cambodia. Phnom Penh: Center for Advanced Study, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99950-977-0-7.
- "Cambodia: State grants three groups ethnic status | Heritage". Indigenousportal.com. 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.