கரண் சிங் யாதவ்
கரண் சிங் யாதவ் (Karan Singh Yadavபிறப்பு: பிப்ரவரி 1, 1945) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 16வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.
கரண் சிங் யாதவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் அல்வார் | |
பதவியில் 1 பிப்ரவரி 2018 – 23 மே 2019 | |
முன்னையவர் | மகாந் சந்தாநாத் |
பின்னவர் | மஹாந்த் பாலாக்நாத் |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004-2009 | |
முன்னையவர் | ஜஸ்வந்த் சிங் யாதவ் |
பின்னவர் | ஜித்தேந்திர சிங் |
தொகுதி | அல்வார் |
முன்னாள் துணைத்தலைவர், 20 அம்சத் திட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 செப்டம்பர் 2006 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 பெப்ரவரி 1945 பிகானேர், ராஜஸ்தான் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | காந்தா யாதவ் |
வாழிடம் | ஜெய்ப்பூர் |
கல்வி & மருத்துவ பணி
தொகுராஜஸ்தான் பீகாநகரைச் சார்ந்த யாதவ், பிகாநகர் எஸ். பி. மருத்துவக் கல்லூரியில் இளம் மருத்துவப் படிப்பினையும், தமிழ்நாடு வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் பொது மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பினை கற்றார். இவர் இப்படிப்பிற்காக பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் நிதியுதவியினைப் பெற்றார். ஆரம்பக் காலத்தில் செய்ப்பூர் எஸ். எம். எஸ். மருத்துவக் கல்லூரியில் 1990 முதல் 1998 வரை பேராசிரியராகவும் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.[1]
அரசியல் பணி
தொகுமருத்துவராகப் பணியினைத் தொடங்கிய யாதவ், இந்தியாவின் 14ஆவது மற்றும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். யாதவ் இத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.[2] இவர் 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் இருமுறை கிஷன்கர் பாஸ் தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.
வாழ்க்கை
தொகுராஜஸ்தான் யாதவ் மகாசபையின் தலைவராக பணியாற்றிய, யாதவிற்கு நான்கு சகோதர சகோதரிகள் உள்ளனர். இவரது தந்தை கணபத் சிங் யாதவ், படித்த ஆளுமை மற்றும் பிகானேர் அரச குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார்.[3] இவர் 1989-ல் மாரடைப்பு காரணமாக இறந்தார். யாதவின் தாயார் சார்பதி தேவி 1981-ல் புற்றுநோய் காரணமாக இறந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://loksabhaph.nic.in/Members/memberbioprofile.aspx?mpsno=4059&lastls=16
- ↑ "अलवर सांसद डॉ. करण सिंह यादव ने एक साल में 25 करोड़ के कार्य कराए, लेकिन अब लोकसभा चुनाव में दावेदारी से दूर". Patrika News.
- ↑ "Dr. Karan Singh Yadav: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia". www.oneindia.com.
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in.