கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி

மகாத்மா காந்தி குடும்ப உறுப்பினர்
கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி

கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (Karamchand Uttamchand Gandhi) (1822-1885)[1] இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், பிகானேர் சமஸ்தான மன்னர்களுக்கு திவான் எனும் தலைமை அமைச்சராக பணிபுரிந்தவர்.

போர்பந்தர் சமஸ்தானத்தின் திவான் பொறுப்பிலிருந்து விலகிய கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி [2]பின்னர் ராஜ்கோட் மற்றும் பிகானேர் சமஸ்தானங்களில் திவானாக பணிபுரிந்தார்.

குடும்பம்தொகு

சௌராட்டிர கற்பத்தின் போர்பந்தரின் வணிகர் குலத்தில் பிறந்த கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி[3] புத்லிபாய் இணையருக்கு நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தன. ஆண் குழந்தைகளில் மிகவும் இளையவரான மகாத்மா காந்தி தற்போது இந்திய நாட்டின் தந்தை எனப்போற்றப்படுகிறார்.

மறைவுதொகு

பவுத்திரம் என்ற நோயால் உடல் நலிந்த கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தமது 63-ஆம் வயதில், 1885-ஆம் ஆண்டில் மறைந்தார். கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி தமது மறைவுக்கு முன்னரே, மகாத்மா காந்தி உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்தார்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு