கரார், மொகாலி

கரார் (Kharar) பஞ்சாப் மாநிலத்தில் அஜித்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். 30°44′N 76°39′E / 30.74°N 76.65°E / 30.74; 76.65 அமைந்துள்ள இந்த நகரம்[1] சராசரியாக 297 மீட்டர்கள் (974 அடி) உயரத்தில் உள்ளது.

கரார்
ਖਰੜ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அஜித்கர்
பெயர்ச்சூட்டுபஞ்சாபின் கல்வி மையம்
அரசு
 • வகைநகராட்சி மன்றம்
 • நிர்வாகம்எம்.சி. கரார்
ஏற்றம்297 m (974 ft)
மொழிகள்
 • அலுவல்முறைபஞ்சாபி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
பின்140301
வாகனப் பதிவுPB27

மக்கள்தொகையியல் தொகு

2001ஆம் ஆண்டு இந்திய கணக்கெடுப்பின்படி[2] கராரின் மக்கள்தொகை 39,410 ஆகும். இவர்களில் ஆண்கள் 54% ஆகவும் பெண்கள் 46% ஆகவும் உள்ளனர். கராரின் படிப்பறிவு வீதம் 75% ஆகும்; இது தேசிய சராசரியான 59.5%ஐ விடக் கூடுதலாகும். ஆண்கள் கல்வியறிவு 79% ஆகவும் பெண்கள் கல்வியறிவு 72% ஆகவும் உள்ளது. கராரின் மக்கள்தொகையில் 6 அகவைக்கு குறைவானவரின் விழுக்காடு 11% ஆக உள்ளது. இங்கு பல பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரியும் உள்ளதால் கரார் பஞ்சாபின் கல்வி மையம் என அறியப்படுகின்றது.

மேற்சான்றுகள் தொகு

  1. Falling Rain Genomics, Inc - Kharar
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரார்,_மொகாலி&oldid=3575068" இலிருந்து மீள்விக்கப்பட்டது