கரிக்கோல் பெட்டி

கரிக்கோல் பெட்டி (Pencil case) என்பது கரிக்கோல்களைச் சேமிக்கப் பயன்படும் ஒரு கொள்கலன் ஆகும். ஒரு கரிக்கோல் பெட்டியில் கரிக்கோல் துருவி, எழுதுகோல் பசைக் குச்சிகள், அழிப்பான்கள், கத்தரிக்கோல் மற்றும் அளவுகோல் போன்ற பலவிதமான மற்ற எழுதுபொருட்களும் இருக்கலாம்.

ஒரு கரிக்கோல் பெட்டி

கரிக்கோல் பெட்டிகள் மரம் அல்லது உலோகம் போன்ற பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படலாம். சில கரிக்கோல் பெட்டிகள் கடினமான மற்றும் உறுதியான ஓட்டிற்குள் உள்ளே அடைத்து வைத்திருக்கப்படுகின்றன, மற்றவை நெகிழி, தோல் அல்லது பருத்தி போன்ற மென்மையான பொருளைப் பயன்படுத்துகின்றன. மென்மையானவைகள் பொதுவாக ஒரு பல்லிணைவுப் பட்டிகை மூலம் இணைக்கப்படுகின்றன.

ஆரம்பகால கரிக்கோல் பெட்டிகள் வட்டமான அல்லது உருளை வடிவத்தில் இருந்தன. ஆரம்பகாலங்களில் அலங்காரக் கல் அல்லது பிளாட்டினம் (1874 இலிருந்து) ஆகியவற்றின் மூலம் அலங்கரிக்கப்பட்டன. [1]

மேலும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

  1. Nadelhoffer, Hans (2007). Cartier. Chronicle Books. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0811860994. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிக்கோல்_பெட்டி&oldid=3763503" இலிருந்து மீள்விக்கப்பட்டது