கருங்கழுத்துப் பாறு

ஒரு பிணந்திண்ணி பறவை இனம்
கருங்கழுத்துப் பாறு
கருங்கழுத்துப் பாறு, மகராட்டிரா மகாசாலாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சி. இண்டிகசு
இருசொற் பெயரீடு
சிப்சு இண்டிகசு
இசுகோபோலி, 17861877[2]
பரவல் (இளச்சிவப்பு நிறத்தில்)

இந்திய கழுகு (சிப்சு இண்டிகசு) என்பது இந்தியா, பாக்கித்தான் மற்றும் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பழைய உலக கழுகு ஆகும். 2002ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் இது மிகவும் ஆபத்துக்கு உள்ளானதாக பறவையாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இதனுடைய எண்ணிக்கை அதிகமாக குறைந்துள்ளது. இந்திய கழுகுகள் டைக்ளோஃபீனாக்[1] நச்சினால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெரும் அழிவுக்கு ஆளாகியுள்ளது.[3] இந்த இனப் பறவைகளானது முதன்மையாக மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பறவை இனமானது (மெலிந்த அலகு கழுகு) இந்தப் பறவையின் ஒரு துணையினமாக கருதப்பட்டு வந்தது. இவை இரண்டும் சேர்த்து நீண்ட அலகு கழுகு (long-billed vulture) என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இவை இரண்டும் வெவ்வேறு சிற்றினங்களாக கருதப்படுகின்றன.

விளக்கம்

தொகு

இந்திய கழுகு நடுத்தர அளவில் பருமனானது. இதன் உடல் மற்றும் மறைவான இறகுகள் வெளிர் நிறத்திலும், பறக்கும் இறகுகள் இருண்ட நிறத்துலும் காணப்படும். இதன் இறக்கைகள் அகலமாகவும், வால் இறகுகள் குறுகியதாகவும் இருக்கும். இதன் தலை மற்றும் கழுத்துப் பகுதி இறகுகளற்று காணப்படும். அலகு மிகவும் நீளமானது. இது 81 முதல் 103 செ.மீ. (32–41 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடியது. இதனுடைய இறக்கை நீட்டம் 1.96 முதல் 2.38 மீ. (6.4–7.8 அடி) நீளமுடையது. பாலின வேறுபாடு காணப்படும். ஆண்களை விட பெண் பறவைகள் பெரியவை.[4]

இதன் எடை 5.5 முதல் 6.3 கிலோ (12–14 பவுண்ட்) வரை இருக்கும். இது யூரேசியன் கிரிபோனை விட சிறியது. இது பூரேசியன் கிரிபானைவிட குறைந்த உடல் பருமன் மற்றும் இறக்கை மறைப்புகளால் வேறுபடுகிறது. கிரிப்பான்களால் காட்டப்படும் வெண்மையான இடைநிலை மறைவான பட்டியும் இதில் இல்லை.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2021). "Gyps indicus". IUCN Red List of Threatened Species 2021: e.T22729731A204672586. https://www.iucnredlist.org/species/22729731/204672586. பார்த்த நாள்: 30 May 2022. 
  2. Scopoli, J. A. (1786–88). "Aves". Deliciae Flora et Fauna Insubricae Ticini. An account including new descriptions of the birds and mammals collected by Pierre Sonnerat on his voyages. London: C. J. Clay. pp. 7–18.
  3. https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/174242-.html
  4. Ferguson-Lees, J. & Christie, D. A. (2001). "Long-billed Vulture Gyps indicus". Raptors of the World. Boston, New York: Houghton Mifflin Harcourt. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0618127623.
  5. "The Peregrine Fund". The Peregrine Fund. 2010. Archived from the original on 2011-05-26. பார்க்கப்பட்ட நாள் 2011-05-31.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gyps indicus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கழுத்துப்_பாறு&oldid=3762638" இலிருந்து மீள்விக்கப்பட்டது