கருஞ்சாம்பல் தலை கொண்டக் குருவி
கருஞ்சாம்பல் தலை கொண்டைக் குருவி ( grey-headed bulbul ) (Brachypodius priocephalus) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தின் உறுப்பினராகும். இது தென்மேற்கு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளைளைச் சேர்ந்தது. மேலும் இது கோவாவின் தெற்கிலிருந்து தமிழ்நாடு வரை 1200மீ உயரம்வரை காணப்படுகிறது. முக்கியமாக இது ஆறுகள் மற்றும் காடுகளுக்குள் உள்ள சதுப்பு நிலங்களுக்கு அருகில் உள்ள அடர்ந்த நாணல் அல்லது முட்புதர்களில் காணப்படுகிறது. இது ஒரு தனித்துவமான குரலைக் கொண்டுள்ளன. இது அடர்த்தியான தாவரங்களை இருப்பிடமாகக் கொண்டவை.
கருஞ்சாம்பல் தலை கொண்டக் குருவி | |
---|---|
கருநாடகத்தின் உடுப்பியில் | |
Calling in background, with louder barbet calls | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Brachypodius |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/BrachypodiusB. priocephalus
|
இருசொற் பெயரீடு | |
Brachypodius priocephalus (ஜெர்டன், 1839) | |
வேறு பெயர்கள் | |
|
விளக்கம்
தொகுகருஞ்சாம்பல் தலை கொண்டக் குருவியானது கொண்டைக்குருவியைவிட அளவில் சற்றுச் சிறியதாக சுமார் 19 செ.மீ. நீளம் இருக்கும். அலகு பசுமை தோய்ந்த மள்ஞள் நிறத்திலும், விழப்படலம் கருஞ்சாம்ப்ல் நிறத்திலும், கால்கள் ஆரஞ்சு மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
தோற்றத்தில் இது அளவில் சிறிய பச்சைப்புறாவோ என்று ஐயுரதக்கதாக இருக்கும். தலை கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். நெற்றி பச்சையாக இருக்கும். உடலின் மேற்பகுதி ஆலிவ் பச்சையாகப் பழுப்புப் பெரும் புள்ளிகளுடன் காட்சியளிக்கும். வால் மேற்போர்வை இறகுகளும் நடுவாலும் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். வாலின் ஓர இறகுகள் ஆலிவ் தோய்ந்த ஆழ்ந்த பழுப்பு நிறமாக கருஞ்சாம்பல் நிற முனைகளோடு காட்சியளிக்கும். மோவாய் கருப்பாகவும், வயிறு ஆலிவ் பச்சையாகவும், வால் சதுரமாகவும் இருக்கும்.
நடத்தையும் சூழலியலும்
தொகுஇப்பறவை தனித்தோ, இணையாகவோ, சிறு கூட்டமாகவோ காணப்படும். கருஞ்சாம்பல் தலை கொண்டைக் குருவி இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் மற்ற கலப்பு இனப் பறவைக் கூட்டங்களோடு சேர்ந்து இரைதேடும்.
இனப்பெருக்கம்
தொகுகருஞ்சாம்பல் தலை கொண்டைக் குருவி சனவரி முதல் சூன் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இனப்பெருக்கம் ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை எட்டுகிறது. புதர்களில் தாழ்வான இடத்தில் காய்ந்த புல், பட்டை, மூங்கில் இலை, வேர் முதலியவற்றைக் கொண்டு சிலந்தி நூலால் கோப்பை வடிவில் ஒரு வாரகாலம் செலவழித்து கூடு அமைக்கும். அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பல கூடுகள் சைஜிஜியம் இனத்தின் மரக்கன்றுகள் அல்லது ஓக்லாண்ட்ரா டிராவன்கோரிகாவின் நாணல்களில் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பொதுவாக இவை ஒரு முட்டை இடும். சில நேரங்களில் இரண்டு முட்டைகளையும் இடும். இவை 12 முதல் 14 நாட்கள் வரை அடைகாக்கும். இவற்றின் முட்டைகள் சில நேரங்களில் பனங்காட்டு அணில்களால் அழிக்கப்பட்டு உண்ணப்படுகின்றன.[3] முட்டைகள் வெளிர் இளஞ்சிவப்பு முதல் லாவெண்டர் இருக்கும். பெற்றோரான இரு பறவைகளும் முட்டையை அடைகாத்தல் குஞ்சுகளை பராமரித்தலில் பங்கேற்கின்றன.[4] குஞ்சுகள் 11 முதல் 13 நாட்களுக்குப் பிறகு கூட்டை விட்டு வெளியேறும்.
உணவு
தொகுஇதன் உணவில் முக்கியமாக பழங்கள் (>65%) மற்றும் முதுகெலும்பிலி விலங்குகள் (>30%) உள்ளன. பழங்களில் நாவல், பொலவக்கொடி பழம், உண்ணிப் பழம் ஆகியவை அடங்கும்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Brachypodius priocephalus". IUCN Red List of Threatened Species 2016: e.T22712619A94339381. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22712619A94339381.en. https://www.iucnredlist.org/species/22712619/94339381. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Eydoux, Fortune; Souleyet, L.F.A. (1841). Voyage Autour du Monde sur la Corvette La Bonite. Paris: Arthus Bertrand. pp. 86–88.
- ↑ Vijayan, V.S., and Balakrishnan, Peroth.
- ↑ Balakrishnan Peroth (2010). "Parental care strategies of grey-headed bulbul, Pycnonotus priocephalus in the Western Ghats, South India". Current Science 98 (5): 673–680. http://www.ias.ac.in/currsci/10mar2010/673.pdf.
- ↑ Balakrishnan, Peroth. (2011). "Breeding biology of the Grey-headed Bulbul Pycnonotus priocephalus (Aves: Pycnonotidae) in the Western Ghats, India". Journal of Threatened Taxa 3 (1): 1415–1424. doi:10.11609/jott.o2381.1415-24.
- ↑ Balakrishnan, Peroth (2014). "Foraging behaviour of the Near Threatened Grey-headed Bulbul Pycnonotus priocephalus in relation to seasons and breeding stages". Journal of the Bombay Natural History Society 111 (1): 10–18. doi:10.17087/bnhs/2014/v111i1/56520.