கருந்தலைக் கிளி
கருந்தலைக் கிளி ( Slaty-headed parakeet ) என்பது உயரம் சார்ந்த இடங்களுக்கு வலசை போகும் சிட்டாசிட் குடும்பத்தைச் சேர்ந்த கிளிகள் ஆகும். இவற்றின் வாழிட எல்லை பாக்கித்தானில் இருந்து, நேபாளம் மற்றும் பூட்டான் வழியாக இந்தியாவில் மேற்கு இமயமலை வரை மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் கிழக்கு இமயமலை வரை நீண்டுள்ளது. இவை குளிர்காலத்தில், தோராயமாக அக்டோபர் கடைசி வாரத்தில் பள்ளத்தாக்குகளுக்கு இறங்குகின்றன.
கருந்தலைக் கிளி | |
---|---|
இமாச்சலப் பிரதேசத்தின் குலு- மணாலி மாவட்டத்தில். | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Himalayapsitta |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/HimalayapsittaH. himalayana
|
இருசொற் பெயரீடு | |
Himalayapsitta himalayana (Lesson, 1832) |
விளக்கம்
தொகுஇப்பறவையில் இரு பாலினத்தவையின் உடலின் பெரும்பகுதியானது பச்சை (நீல நிறத்துடன்) இறகுகளைக் கொண்டுள்ளது. இவற்றின் தலை முழுவதும் சாம்பல் நிறமாக (சிலேட் கறுப்பு நிறம்) இருக்கும். தலையும் கழுத்தும் சந்திக்கும் பகுதி வெளிர் நீல நிறத்தில் இருக்கும். ஆண் பறவைகளின் உள் இறக்கை போர்வை இறகுகளில் கருமையான அரக்கு நிற திட்டுகள் காணப்படும். பெண் பறவைகளுக்கு இந்த அரக்கு நிற திட்டுகள் இருக்காது. ஆண் பறவைகளுக்கு நீண்ட நடு வால் இறகுகள் உள்ளன. அவை பெண் பறவைகளுக்கு குறைவாக இருக்கும். வால் அடிப்பகுதி பச்சை நிறமாகவும், ஆழமான நீல நிறமாகவும், பிரகாசமான மஞ்சள் நிற முனையுடனும் இருக்கும். இந்தக் கிளியின் மேல் அலகு பிரகாசமான சிவப்பு-ஆரஞ்சு நிறத்திலும் கீழ் அலகானது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் விழிப்படலம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.[2]
பரவலும் எண்ணிக்கையும்
தொகுகருந்தலைக் கிளி இமயமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பரந்த அளவில் உள்ளது. இந்தப் பறவை மேற்கு பூட்டான், நேபாளத்தின் பெரும்பகுதி மற்றும் இந்திய மாநிலங்களான சிக்கிம், உத்தராகண்டம், இமாச்சலப் பிரதேசம், (தெற்கு) ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது இஸ்லாமாபாத்தின் வடக்கே ஒரு சிறிய பகுதியிலும், பாக்கிதானில் உள்ள நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் தெற்குப் பகுதிகளிலும் காணப்படுகிறது. ஆப்கானித்தானில் உள்ள காபுல், லோகார், நங்கர்கார் மற்றும் பாக்டியா மாகாணங்களில் உள்ள மலைப்பகுதிகளின் சிறிய திட்டுக்களிலும் இந்த பறவையை காணலாம்.[3]
சூழலியலும் நடத்தையும்
தொகுஇந்த பறவை இனம் பொதுவாக 460-2400 மீட்டர் உயரத்தில் அதன் இயற்கையான வாழ்விடமான மலைப்பகுதி/மலைச்சரிவு காடுகள், பள்ளத்தாக்கு வனப்பகுதிகளில் காணப்படுகிறது. இவை சிறிய கூட்டமாக அல்லது குடும்ப குழுக்களாக சேர்ந்து பழங்கள், கொட்டைகள், விதைகள், தேன், வித்துக்கள் போன்ற உணவுகளைத் தேடுகின்றன. பல பெரிய கூட்டங்களாக பொதுவாக ஈரமான பருவத்தின் முடிவில் காணப்படுகின்றன. அவை குளிர்காலத்தில் பள்ளத்தாக்குகளுக்கு இறங்குகின்றன. இவை போதுவாக பச்சைக்கிளி, செந்தலைக் கிளி, பூந்தலைக்கிளி போன்ற பிற கிளி இனங்களுடன் கலந்து காணப்படும். பெண் பறவைகள் பொதுவாக 28.5 x 22 மிமீ அளவுள்ள 4-5 முட்டைகளை இடும். குஞ்சு பொரிப்பதற்காக தோராயமாக 23-24 நாட்கள் அடைகாக்கும். ஆப்கானித்தாதான் பகுதியில், இந்தப் பறவைகள் பெரும்பாலும் செதில் வயிற்று மரங்கொத்தியின் பழைய பொந்துகளில் கூடு கட்டும். மேலும் இந்த இனங்கள் வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒன்றுக்கொன்று நெருக்கமாக கூடு கட்டக்கூடும். கருந்தலைக் கிளி பொதுவாக மார்ச்-மே மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். இதன் பொதுவான ஆயுட்காலம் 15-17 ஆண்டுகள்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Psittacula himalayana". IUCN Red List of Threatened Species 2016: e.T22685468A93074726. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22685468A93074726.en. https://www.iucnredlist.org/species/22685468/93074726. பார்த்த நாள்: 13 August 2023.
- ↑ 2.0 2.1 World Parrot Trust. "Slaty-headed Parakeet (Psittacula himalayana)". Parrot Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "Slaty-headed Parakeet (Psittacula himalayana) - BirdLife species factsheet". datazone.birdlife.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
வெளி இணைப்புகள்
தொகு- Oriental Bird Images: Slaty-headed Parakeet Selected photos
- பொதுவகத்தில் Psittacula himalayana தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.