கருந்திட்டு கத்தாளை

மீன் இனம்
கருந்திட்டு கத்தாளை
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. diacanthus
இருசொற் பெயரீடு
Protonibea diacanthus
(Lacepède, 1802)

கருந்திட்டு கத்தாளை அல்லது கூரல் மீன் (Protonibea diacanthus, ஆத்திரேலிய பகுதிகளில் black jewfish என்று அழைக்கப்படுகிறது. [1] ) என்பது இந்தோ-பசிபிக் கடற் பகுதியில் காணப்படும் மீன் இனமாகும். [2] இந்த மீன் மிகவும் விலையுயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் இதயம் 'கடல் தங்கம்' என்று அழைக்கப்படுகிறது, இது மருத்துவ குணங்கள் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மருந்துகளை தயாரிக்க பயன்படும் ஒரு முக்கிய பொருளாக உள்ளது.

வணிக முக்கியத்துவம்

தொகு

இந்த மீன் ஒரு சுவையான உணவாக கருதப்படுகிறது. இதன் உள் உறுப்புகள் கிழக்காசியாவில் அதன் மருத்துவ குணங்களுக்காக பாராட்டப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஆங்காங், யப்பான் போன்ற நாடுகளால் இந்த மீன்கள் அதிக அளவு வாங்கப்படுகின்றன.

மகாராட்டிரத்தின் மும்பை - பால்கர் கடற்கரைக்கு அருகே இரண்டு இந்திய மீனவர்களால் 30 கிலோ எடையுள்ள கருந்திட்டு கத்தாளை மீன் பிடிக்கப்பட்டது. [3]

மராட்டியத்தில் இந்த மீன்களின் உள்ளூர் பெயர் கோல் மீன் ஆகும். இவற்றின் மதிப்பு பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. 30 கிலோ கொண்ட ஆண் மீன் 4-5 இலட்சம் , பெண் 1-2 லட்சம் வரை பெறும். மீன்களின் உள் உறுப்புகளின் அளவு மற்றும் தடிமனுக்கு ஏற்ப இதன் விலை மதிப்பு மாறுபடும் (இதன் உள்ளுருப்பு போட் சட்பதி மும்பையில், போட்டின் விலை சுமார் 5-6 லட்சம்/கிலோ மற்றும் இறைச்சியின் விலை 500-600 ரூபாய்/கிலோ ஆகும்.[சான்று தேவை]

இந்த மீன் ஒடியா மொழியில் டெலியா என்று அழைக்கப்படுகிறது, 2020 இல், ஒடிசாவைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 19.5 கிலோ எடையுள்ள ஒரு மீனை பிடித்தனர். ஒரு மருந்து நிறுவனம் ஏலத்தில் ஒரு கிலோவுக்கு ₹ 8000 கொடுத்து வாங்கியது. இதேபோல் 2019 ஆம் ஆண்டில், ஒடிசாவைச் சேர்ந்த மற்றொரு மீனவர் 10 கிலோ எடைகொண்ட மீனைப் பிடித்து ஒரு கிலோ ₹ 10,000 என விற்றார்.[சான்று தேவை]

குறிப்புகள்

தொகு

 

  1. Boating, fishing and marine > Fish species > Black jewfish Northern Territory Government. Retrieved 20 February 2021.
  2. "Protonibea diacanthus". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} {{{year}}} version. N.p.: FishBase, {{{year}}}.
  3. "Mumbai Fishermen Strike 'Ghol', Sell a Fish for Rs 5.5 Lakh", CNN-News18, 7 August 2018. Retrieved 14 August 2019

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்திட்டு_கத்தாளை&oldid=3259669" இலிருந்து மீள்விக்கப்பட்டது