கருப்புக் கவுனி (நெல்)

கருப்புக் கவுனி அல்லது கருப்புக்கவுணி என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தக்குடி எனும் நாட்டுப்புற பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, சாப்பாடு (உணவு) தயாரிக்க உகந்ததல்ல என கூறப்படுகிறது.[1]

கருப்புக் கவுனி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
150 - 170 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கால அளவு

தொகு

நீண்டகால நெற்பயிரான இது, சுமார் ஐந்து மாதகாலம் முதல், ஆறுமாத காலத்தின் முடிவில் (150 - 170 நாட்கள்) அறுவடைக்கு வரக்கூடிய நெல் இரகமாகும்.[1]

 
கருப்புக் கவுனி நெல்

பருவகாலம்

தொகு

சுமார் 150 - 170 நாட்கள் மொத்தப் பயிர்க்கால அளவுடைய இதன் நெற்பயிர்கள், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய சனவரி மாதம் தொடங்கும் நவரைப் பருவமும், மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவமும் ஏற்றதாக கூறப்படுகிறது.[1] மேலும் இப்பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]

வளருகை

தொகு

நேரடி விதைப்பு முறைக்கு ஏற்றதாக உள்ள இவ்வகை நெற்பயிர், இயற்கை உறங்களான பசுந்தாள், பசுந்தழை, மற்றும் சிதைவடைந்த இயற்கை உரங்களைக் கொண்டு வேளாண்மை செய்ய உகந்தாக கருதப்படுகிறது. மேலும், மட்டற்ற களைப்புத் திறனோடு அதிகக் கதிர் எடுக்கும் தன்மையுடைய இந்த நெல் இரகம், சாயாத ஆற்றால் உடையதாகும். கருப்புக் கவுனியின் நெற்பயிர் ஒப்பிடத்தக்களவில் நீர் குறைந்த மற்றும், உலர் நிலங்களிலும், கரிசல் மற்றும் செம்மண் போன்ற நிலப்பகுதிகளில் செழித்து வளரக்கூடிய நெல் இரகமாகும்.[1]

  • கருப்புக் கவுனியின் தானியமணி 1 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாகும்.
  • கருப்புக் கவுனியின் வைக்கோல் 150 சதவிகிதம் அதிகமாகக் கிடைக்கிறது.[1]
  • கருப்புக் கவுனியின் அரிசிச்சோறு போக சக்தி எனப்படும் ஆண்மைச் சக்தியை கொடுக்கிறது.[3]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Traditional Varieties grown in Tamil nadu - Karuppukavuni". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
  2. பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. மருத்துே குணங்கள் உள்ள பாரம்பாிய நெல் ரகங்கள் பரவலாக்க அறிவுறுத்தல்

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்புக்_கவுனி_(நெல்)&oldid=4051067" இலிருந்து மீள்விக்கப்பட்டது