கருப்பு ஆரஞ்சு ஈபிடிப்பான்

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ficedula|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கருப்பு ஆரஞ்சு ஈப்பிடிப்பான் அல்லது கருப்பு செம்பழுப்பு ஈப்பிடிப்பான் (black-and-orange flycatcher or black-and-rufous flycatcher) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைளின் நடு மற்றும் தெற்குப் பகுதிகளான நீலமலை மற்றும் பழனி மலைத்தொடர்களில் வாழ்கிறது.[2]

கருப்பு ஆரஞ்சு ஈப்பிடிப்பான்
Calls
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ficedula
இனம்:
இருசொற் பெயரீடு
Ficedula nigrorufa
(ஜெர்டன், 1839)
வேறு பெயர்கள்

Ochromela nigrorufa
Muscicapa nigrorufa

விளக்கம் தொகு

 
ஒரு இணைப்பறவை. இடதில் பெண், வலதில் ஆண்

இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நீலகிரி, பழனி மேலும் அது தொடர்புடைய மலைத்தொடர்களின் உயரமான பகுதிகளில் முதன்மையாக காணப்படும் ஒரு பறவையாகும். ஆண் பறவையானது கறுப்புத் தலையுடன் கருப்பு இறக்கைகளுடனும் இருக்கும். பெண் பறவை கருப்பு நிறத்திற்கு பதிலாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். மேலும் இலேசான கண் வளையம் உள்ளது. இவை பொதுவாக தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படுகின்றன.[3][4]

இரண்டு வார வயதுடைய இளம் பறவை பழுப்பு ஆரஞ்சு நிறத்தில் வெண்மையான வாலடி மற்றும் அடிவயிற்றுடன் இருக்கும். தலையில் கருமையான கோடுகள் இருக்கும் மேலும் இறக்கைகள் பழுப்பு தோய்ந்த நீல நிறத்தில் காணப்படும். கண்ணைச் சுற்றி ஒரு வெளிர் வளையம் இருக்கும். மேலும் ஆரஞ்சு நிறத்தில் குட்டையான வால் இருக்கும். எட்டு வாரங்களுக்குப் பிறகு, தலை உச்சியில் பழுப்பு நிற இறகுத் திட்டுகளைத் தவிர, அவை கிட்டத்தட்ட முதிர்ந்த பறவைகளைப் போலவே தோன்றும்.[5]

பரவலும் வாழ்விடமும் தொகு

இந்த பறவையின் முக்கிய வாழிடம் 1,500 மீ (4,900 அடி) உயரத்துக்கும் அதிக உயரமான பீடபூமி ஆகும். நீலகிரியின் பகுதிகளான, பழனி மலைகள், பிலிகிரிரங்க மலைகள் (பெல்லாஜி மற்றும் ஹொன்னமெட்டி), மற்றும் கண்ணன் தேவன் மலைகள் போன்றவை ஆகும். அவர்கள் இப்பறவைகள் திறந்த சோலைக்காடுகள் புல்வெளி வாழ்விடங்களில் அதிக இலைகள் கொண்ட மரங்கள் உள்ள பகுதிகளை விரும்புகின்றன. இனப்பெருக்க காலத்தில் 2.8 ஹெக்டேர் (6.9 ஏக்கர்) பரப்பிற்கு ஒரு இணை என்ற அடர்த்தியில் காணப்பட்டன. இது குறுகிய பகுதி சார்ந்த பறவை. இளம் பறவைகள் பரவுவதைத் தவிர இடம் சார்ந்த வேறு எந்த இடப்பெயர்வுகளும் குறிப்பிடப்படவில்லை.[6] வடக்கே, குதுரைமுக தேசியப் பூங்கா மற்றும் பாபா புதன்கிரி மலைகள் மற்றும் தெற்கே அஷாம்பு மலைகள் வரையும் காணப்படுகின்றன.[7] மகாராட்டிரம் மற்றும் இலங்கையில் [8] இனங்கள் குறித்த சில பழைய பதிவுகள் சந்தேகத்திற்குரியனவாக கருதப்படுகின்றன.[3][6]

நடத்தையும் சூழலியலும் தொகு

இனப்பெருக்க காலமான, மார்ச் முதல் மே வரை, இந்த பறவைகள் மிகவும் குரல் கொடுக்கும், மேலும் இவை "சீ-ரி-ரிர்ர்" அல்லது "வீ-ச்சீ-ரீ-ரிர்ர்" என்ற சீழ்க்கைப் பாடலைப் பாடும். இவை தாழ்ந்த உயரத்தில் (2 மீ உயரத்திற்கு கீழே [9] ) கீழே பறந்து பூச்சிகளை பிடித்து உண்கின்றன, மேலும் தரையில் இருந்தும் பூச்சிகளை எடுத்து உண்கின்றன.[6] குறிப்பிட்டப் பிரதேசத்திலேயே ஆண்டு முழுவதும் ஒரு இணை வாழ்கிறது. அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கையை சுட்டிக்காட்டும் விதமாக ஆண் பறவை அலகு, வால் விசிறி, இறக்கைகள் போன்றவற்றை விரிப்பது மற்றும் "கீட்-கீட்" என ஒலி எழுப்புவது ஆகியவற்றைச் செய்யும். அலாரம் அழைப்பு ஒரு ஜிட்-ஜிட் ஆகும். ஆண் பறவைகள் பொதுவாக வலுவெதிர்ப்பில் ஈடுபடும் ஆனால் பெண் பறவைகளும் சில சமயங்களில் இதில் சேரும் [10] புதர்கள் சிறு செடிகள் ஆகியவற்றில் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்துக்குள் பெண் பறவை கூடு கட்டும். பொதுவாக நிற புள்ளிகள் கொண்ட இரண்டு முட்டைகளை இடும். இளம் பறவைகள் பழுப்பு நிறமாகவும் புள்ளிகளுடனும் இருக்கும். இந்த கூடு புல், இலை முதலியவற்றால் ஒழுங்கற்ற கோப்பை வடிவில் கட்டப்படுகிறது. கூட்டின் வெளிப்புற விட்டம் சுமார் 6 அங்குலங்கள் (15 cm) மற்றும் முட்டை குழி சுமார் 2 அங்குலங்கள் (5.1 cm) விட்டம் மற்றும் 2 அங்குலங்கள் (5.1 cm) ஆழமானது.[11]

இப் பறவைகள் அதிகாலையிலும் சாயங்காலத்திலுமே கூடுதலாக உணவு தேடுகின்றன. இந்த காலகட்டத்தில், இவை ஒரு மணி நேரத்திற்கு 100 பூச்சிகளைப் பிடிக்கின்றன, அதே சமயம் இடைப்பட்ட நேரத்தில் இவை பாதி திறனுடனே உணவு தேடுகின்றன.[6]

ஃபிசிடுலா பேரினத்தில் கருப்பு ஆரஞ்சு ஈப்பிடாப்பான் மற்றும் செம்பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான் ( ஃபிசெடுலா டுமெடோரியா ) ஆகியன மட்டுமே ஒரே பகுதியில் வாழும் பறவை இனங்களாகும். நீண்ட தூரம் புலம்பெயரக்கூடிய பறவைகளுக்கு உரிய நீளமான மற்றும் அதிக கூர்மையான இறக்கை அமைப்பு இப்பறவைகளுக்கு இல்லை.[12]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Ficedula nigrorufa". IUCN Red List of Threatened Species 2017: e.T22709415A118488735. https://www.iucnredlist.org/species/22709415/118488735. பார்த்த நாள்: 6 November 2021. 
  2. Outlaw, D.C.; Voelker, G. (Oct 2006). "Systematics of Ficedula flycatchers (Muscicapidae): A molecular reassessment of a taxonomic enigma.". Molecular Phylogenetics and Evolution 41 (1): 118–126. doi:10.1016/j.ympev.2006.05.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16797192. http://www.umsl.edu/~outlawdc/PDFs/FicedulaSystematics.pdf. 
  3. 3.0 3.1 Ali, S.; Ripley, S.D. (1996). Handbook of the birds of India and Pakistan. 7 (2nd ). Oxford University Press. பக். 174–175. 
  4. Baker, E.C.S. (1924). Fauna of British India. Birds. 2 (Second ). Taylor and Francis. பக். 253–254. 
  5. Khan, M.A.R. (1979). "Field characters and juvenile plumage of Muscicapa nigrorufa (Jerdon)". Bangladesh Journal of Zoology 7 (2): 109–112. 
  6. 6.0 6.1 6.2 6.3 Khan, M.A.R. (1978). "Ecology of the Black-and-Orange Flycatcher Muscicapa nigrorufa (Jerdon) in Southern India". Journal of the Bombay Natural History Society 75 (3): 773–791. https://www.biodiversitylibrary.org/page/48296958. 
  7. Praveen, J.; Kuriakose, G. (2006). "A review of the northern distribution range of near-threatened Black-and-Orange Flycatcher Ficedula nigrorufa in the Western Ghats". Zoos' Print Journal 21 (12): 2516–2517. doi:10.11609/jott.zpj.1609.2516-7. 
  8. Layard, E.L. (1873). "Notes on Mr E W H Holdsworth's catalogue of Ceylon birds". Proceedings of the Zoological Society of London: 203–205. https://archive.org/stream/proceedingsofgen73zool#page/203/mode/1up. 
  9. Somasundaram S; L Vijayan (2008). "Foraging Behaviour and Guild Structure of Birds in the Montane Wet Temperate Forest of the Palni Hills, South India". Podoces 3 (1/2): 79–91. 
  10. Khan, M.A.R. (1980). "Territorial behaviour of the black-and-orange flycatcher Muscicapa nigrorufa (Jerdon) in southern India.". Bangladesh J. Zool. 8 (2): 89–97. 
  11. Morgan, Rhodes W (1875). "On the nidification of certain South-Indian birds". Ibis 5 (19): 313–323. doi:10.1111/j.1474-919X.1875.tb05973.x. https://archive.org/stream/ibis53brit#page/318/mode/1up. 
  12. Outlaw, Diana (2011). "Morphological evolution of some migratory Ficedula flycatchers". Contributions to Zoology 80 (4): 279–284. doi:10.1163/18759866-08004005. http://dpc.uba.uva.nl/cgi/t/text/get-pdf?idno=m8004a05;c=ctz. பார்த்த நாள்: 4 May 2012.