கருப்பை மிகைப்பெருக்கம்
கருப்பை மிகைப்பெருக்கம் (Uterine hyperplasia) என்பது பெண்களின் கருப்பையானது அளவிலும் கன அளவிலும் அதிகரித்து அசாதரணமாக பெரிதாகும் ஒரு நிலையாகும். இம்மருத்துவ நிலை அசாதாரண கருப்பை, கருப்பை ஐப்பர்பிளேசியா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. கருப்பை சுரப்புத் திசுக்கட்டிகள், கருப்பை நார்த்திசுக் கட்டிகள், சூல்பை நீர்க்கட்டிகள், மற்றும் கருப்பையகப் புற்றுநோய்.[1] போன்ற நோய்களுக்கான ஒரு அறிகுறியாக கருப்பை மிகைப்பெருக்கம் கருதப்படுகிறது.