கருவாவல்

மீன் இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Parastromateus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கருவாவல், கருப்பு வவ்வால், கருப்பு வாவல் (Black pomfret) என்பது ஒரு மீன் இனம் ஆகும். இது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படுகிறது. உள்ளூர் மீன்வளத்திற்கு இந்த இனம் மிகவும் முக்கியமானது. மேலும் இதன் பேரித்தைச் சேர்ந்த ஒரே அறியப்பட்ட இனமாக இது உள்ளது.

கருவாவல்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Parastromateus
இனம்:
இருசொற் பெயரீடு
Parastromateus niger
(Bloch, 1795)

வகைபிரித்தல்

தொகு

கருவாவலானது பாராஸ்ட்ரோமேட்டஸ் இனத்தின் ஒரே உறுப்பினர் ஆகும்.[2] கருவாவலை முதன்முதலில் அறிவியல் பூர்வமாக செர்மன்-யூத மருத்துவரும், இயற்கை ஆர்வலருமான, மார்கஸ் எலிசர் ப்லோச் தனது மீன் கலைக்களஞ்சியமான ஆல்ஜெமைன் நேட்டர்கெசிச்செ டெர் ஃபிஷே நூலில் விவரித்தார்.[3] பராஸ்ட்ரோமேட்டஸ் நைஜர் என்ற பெயரின் சொற்பிறப்பியல் என்பது பாரை வடிவத்தில் இருந்து பெறப்பட்டது மற்றும் ஸ்ட்ரோமேட்டஸ் என்றால் நிறைய நிறங்களைக் கொண்ட ஒரு தட்டையான உடலைக் கொண்ட மீன் என்பதைக் குறிக்கிறது.[2]

உடற்கூறியல்

தொகு

கருப்பு வாவல் தட்டையான உடலைக் கொண்டுள்ளது. இதன் முதுகுத் துடுப்பும், அடித் துடுப்பும் சமமான அளவில் இருக்கும்.[4] இதன் உடல் முழுவதும் சிறிய அடர் சாம்பல் நிற செதில்களால் முடப்பட்டிருக்கும். கருவாவலின் பிளவுற்ற வால் துடுப்பானது 30 செமீ இருக்கும், சிலசமயம் 75 செமீ வரையும் இருக்கலாம்.[2]

வாழ்விடம்

தொகு

கருப்பு வாவல் தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், கென்யா, அரபிக்கடல் வங்காள விரிகுடா, பாரசீக வளைகுடா, இந்தோனேசியா, பிலிப்பீன்சு, சீனா, தெற்கு யப்பான் மற்றும் ஆத்திரேலியா கடலோரங்களில் காணப்படுகிறது.[2] கருவாவல் ஒரு கடல் மீனாகும். இது பெரும்பாலும் கடலில் 15-40 மீட்டர் ஆழத்தில் காணப்படுகிறது, ஆனால் 105 மீட்டர் ஆழத்திலும் காணலாம்.[4] கறுப்பு வாவல் பொதுவாக பகல் நேரத்தில் கடலின் தரைப்பகுதியில் காணப்படுகிறது, இரவில் மேற்பரப்பிற்கு வருகிறது.[4]

உணவு

தொகு

கருப்பு வவ்வாளின் உணவு மிகவும் மாறுபட்டது. குவைத் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் துறையைச் சேர்ந்த ஸ்டீவன் தாட்ஸி தனது பத்திரிகை கட்டுரையில், பாரசீக வளைகுடாவின் குவைத் கடற் பரப்பில் காணப்படும் கருப்பு வாவல்களின் உணவு மற்றும் உணவுப் பழக்கம் பற்றி எழுதியிருக்கிறார். குவைத்தை சுற்றியுள்ள நீர்பரப்பில் அவரது ஆய்வு மேற்கொண்டார். அதில் 1108 மாதிரிகளில், கருப்பு வாவலின் மூன்று முக்கிய உணவுக் கூறுகள் பின்வருமாறு: 23% உணவாக இருகலப்பாசி; 21% மீன் முட்டை மற்றும் குடம்பிகள், 20% உணவாக ஓட்டுடைய கணுக்காலிகள் பங்களிப்பு (தாட்ஸி, 2007). ஓட்டுடைய கணுக்காலிகள் என்பவற்றின் கீழ், கருப்பு வாவல் உணவில் காணப்படும் ஓடுடைய கணுக்காலிகளில் நன்னீர் முகட்டுப்பூச்சிகள் (77%), பிராச்சியூரன் ஜோயே (65%) இறால் பிந்தைய லார்வாக்கள் (29%) மற்றும் இறாலின் பெனாய்டுகள் (16%).[5]

குறிப்புகள்

தொகு
  1. Smith-Vaniz, W.F.; Borsa, P.; Carpenter, K.E. et al. (2018). "Parastromateus niger". IUCN Red List of Threatened Species 2018: e.T20432288A46664109. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T20432288A46664109.en. https://www.iucnredlist.org/species/20432288/46664109. 
  2. 2.0 2.1 2.2 2.3 Parastromateus niger summary page.
  3. BLOCH, MARCUS ELIEZER - JewishEncyclopedia.com. jewishencyclopedia.com. (2021).
  4. 4.0 4.1 4.2 FAO Fisheries & Aquaculture - Aquatic species. fao.org. (2021).
  5. Dadzie, Steven.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவாவல்&oldid=3928622" இலிருந்து மீள்விக்கப்பட்டது