கரூர் பாலமலை முருகன் கோயில்

பாலமலை முருகன் கோயில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி வட்டாரத்தில் ஒரு பகுதியாக உள்ள க.பரமத்தி ஒன்றியத்தில் பவித்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலையில் அமைந்துள்ளது. இக்கோவில் கரூர் மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் முருகன் கோயில்களில் ஒன்றாகும்.[1]

பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவு:பாலமலை, பவித்திரம் ஊராட்சி, கரூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்

அமைவிடம்

தொகு

இக்கோவில் கரூர் நகரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தல வரலாறு

தொகு

இந்திரன் இக்கோவிலின் இறைவனை வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் ஆகும்.

கோயிலின் அமைவு

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். பெரிய குன்றின் மீது கோயில் அமைந்துள்ளது. சுமார் 40 படிகள் கடந்து சென்றால் இடதுபுறம் இடும்பன் சிலை உள்ளது. பின் சிவன் காட்சியளிக்கிறார். அதன் பின் வினாயகரையும் புற்றுக்கண்ணையும் வணங்கி தலக்கடவுளான முருகப்பெருமானை வணங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தல விருட்சம்

தொகு

இக்கோவிலின் தலவிருட்சம் வில்வம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு