கரோலின் சூமேக்கர்

கரோலின் சூமேக்கர் (Carolyn Jean Spellmann Shoemaker; சூன் 24, 1929 – ஆகத்து 13, 2021) ) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வால்வெள்லி சூமேக்கர்-இலெவி 9 இன் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார்.[1]

கரோலின் எஸ். சூமேக்கர்
கரோலின் சூமேக்கர்
பிறப்பு(1929-06-24)சூன் 24, 1929
காலப், நியூ மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஆகத்து 13, 2021(2021-08-13) (அகவை 92)
ஃபிளாக்கிசுட்டாஃப், அரிசோனா, அமெரிக்கா
குடியுரிமைஅமெரிக்கர்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்,
பசதேனா, கலிபோர்னியா
பலோமார் வான்காணகம், சாண்டீகோ, கலிபோர்னியா
அறியப்படுவதுவால்வெள்ளி சூமேக்கர்-இலெவி 9 இன் இணைகண்டுபிடிப்பாளர்
விருதுகள்ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் (1998)
நாசா தேசிய வான், விண்வெளி துறைஆள்வகம்,
நாசா மீச்சிறப்பு அறிவியல் தகைமை பதக்கம்
இரிட்டனவுசு பதக்கம் (1988)
ஆண்டின் அறிவியலாளர் விருது (1995)
துணைவர்யூகின் சூமேக்கர் 1951–1997 (இறப்பு)

இளமையும் சொந்த வாழ்க்கையும்

தொகு

கரோலின் சுபெல்மன் ஐக்கிய அமெரிக்காவில் உள்ல நியூமெக்சிகோ மாநில காலப்பில் பிறந்தார். இவரது குடும்பம் கலிபோனிய சிக்கோவுக்கு இடம்பெயர்ந்தது. சிக்கோவில் இவரும் இவரின் உடனொஇறப்பும் தம் பெற்றோரான இலியனார்டு சூமேக்கர், ஏசெல் ஆர்த்தருடன் வளர்ந்தனர் . சுபெல்மன் தன் திருமணத்துக்கு மின்பே இளவில் பட்டமும் முதுவர் பட்டமும் சிக்கோ அரசு பல்கலைக்கழகத்தில்வரலாரு, அரசியல், ஆங்கில இலக்கியம் ஆகிய புலங்களில் பெற்றார்.[2] பின்னர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதிப்பொறியியல் இள்ட்டாவ்மல் பெற்றார்.[3] இவர் கோளியலாளரான ஜீன் சூமேக்கரை 1951 ஆகத்து 8 இல் மணந்தார்.[4] இவர் கிறிசுட்டி, இலிண்டா, பட் சூமேக்கர் ஆகிய மூன்று குழந்தைகளைப் பெற்றார். இக்குடும்பம் கொலராடோ, கிரேண்டு ஜங்சனுக்கும் கலிபோர்னியா மெனியோ பார்க்குக்கும் கலிபோர்னியா பசதேனாவுக்கும் இடன்பெயர்ந்து இறுதியில் அரிசோனா பிலாகுசுடாபில் நிலையா அமர்ந்த்து. இங்கு கரோலின் தன் கணவரோடு உலோவெல் வான்காணகத்தில் பணிபுரிந்தார்.[4]

வாழ்க்கைத் தொழில்

தொகு

முதலில் இவர் உள்ளூர்ப் பள்ளியொன்றில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார்.[3] இப்பணி மன நிறைவு தராத்தால், பனியைத் துறந்து தன் குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளார். தன் 51 ஆம் அகவையில் அவ்ர்கள் வளர்ந்து இவரை விட்டுப் பிரிந்ததும், தன் கணவரின் மொத்தல் குழிப்பள்ளங்களின் நிலவரையை உருவாக்கிப் பகுப்பாய்வு செய்யும் ஆய்வில் கள உதவியாளராக பணிபுரிந்தார்.[2] இவர் தன் வானியல் பணியைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலும் கலிபோர்னியாவில் உள்ள சாண்டீகொ பலோமார் வான்காணகத்திலும் புவியைக் கடக்கும் வால்வெள்ளி, சிறுகோள்களின் தேட்டப் பணிவழியாக 1980 இல் தொடங்கினார்.[5] இந்த ஆண்டே அமெரிக்க புவியியல் அளக்கை வானியலின் வருகைதரு அறிவியலாளராக வாடகைக்கு அமர்த்தியது. பின்னர் 1989 இல் இவர் வானியல் ஆராய்ச்சிப் பேராசிரியராக வட அரிசோனா பல்கலைக்கழகத்தில் பனிபுரியலானார்.[2] இவர் வால்வெள்லிகளையும் கோள்கடக்கும் சிறுகோள்களையும் தேடும் ஆய்வில் கவனத்தைக் குவித்தார்.[4] இவர் டேவிடு எச். இலெவியுடன் இணைந்து, வியாழனை உடைந்தநிலையில் சுற்றிவந்த சூமேக்கர்- இலெவி 9 வால்வெள்லியை 1993 மார்ச் 24 இல் கண்டுபிடித்தார்.[6] பின் 1997 இல் தன் கணவர் இறந்ததும், இலெவியுடன் உலோவெல் வான்காணகத்தில் பணிபுரிந்து இன்றுவரை தொடர்கிறார்.[7]

இவர் 1980 களிலும் 1990 களிலும் பலோமார் வான்காணகத்தில் அகல்புல தொலைநோக்கியை பருநோக்கியை இணைத்துப் பயன்படுத்தி நிலைவின்மீன்களின் பின்னணியில் அமைந்த நகரும் வான்பொருட்களைக் கண்டுபிடித்தார்.

ஏறத்தாழ 2002 அளவில் இவர் 32 வால்வெள்ளிகளையும் 800 அளவுக்கும் மேலான சிறுகோள்களையும் கண்டுபிடித்தார்.[5]

விருதுகள்

தொகு

சூமேக்கர் வட அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து தகவுறு முனைவர் பட்டத்தைப் பெற்றார். நாசா நிறுவனம் இவருக்கு நாசா மீச்சிரப்பு அறிவியல் தகைமை விருதை 1996 இல் வழங்கியது. இவர் தன் கணவருடன் 1998 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஜேம்சு கிரைகு பதக்கத்தைப் பெற்ரார்.[8] இவர் இரிட்டனவுசு வானியல் கழகத்தில் இருந்து 1988 இல் இரிட்டனவுசு பதக்கத்தைப் பெற்றார்[6] மேலும் இவர் 1995 இல் அவ்வாண்டின் அறிவியலாலர் விருதையும் பெற்றுள்ளார்.[6]

கண்டுபிடித்த சிறுகோள்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Mestel, Rosie (July 9, 1994). "Carolyn Shoemaker and 'Her Comet'". New Scientist 143 (1933): p. 23. http://www.bibliotecapleyades.net/esp_shoemaker_a.htm. 
  2. 2.0 2.1 2.2 Wayne, Tiffany K. (2011). "Carolyn Shoemaker". Encyclopedia of Women in Today's World, Vol. 4. Thousand Oaks, Calif.: Sage Publications.
  3. 3.0 3.1 Chapman, Mary G. (May 17, 2002). "Carolyn Shoemaker". USGS Astrogeology Science Center.
  4. 4.0 4.1 4.2 "Shoemaker, Eugene Merle" (2002)
  5. 5.0 5.1 "She's Looking Out for Us". Explorer (American Association of Petroleum Geologists). May 2001. http://www.aapg.org/explorer/2001/05may/denver_c_shoemaker.cfm. 
  6. 6.0 6.1 6.2 Lang, Susan S. (April 11, 2002). "Comet hunter Carolyn Shoemaker to speak at Cornell April 21". Cornell Chronicle. http://www.news.cornell.edu/stories/2002/04/comet-hunter-carolyn-shoemaker-speak-april-21. 
  7. Shoemaker, Carolyn (November 27, 1998). "Space—Where Now, and Why?". Science 282 (5394): 1637–1638. doi:10.1126/science.282.5394.1637. https://archive.org/details/sim_science_1998-11-27_282_5394/page/1637. 
  8. "James Craig Watson Medal". National Academy of Sciences.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_சூமேக்கர்&oldid=3949919" இலிருந்து மீள்விக்கப்பட்டது