கர்ணி மாதா கோயில்

கர்ணி மாதா கோயில் (Karni Mata Temple - (இந்தி: करणी माता मंदिर) மேற்கு இந்தியாவின், பிகானேர் மாவட்டத்தின் தலைமையிடமான பிகானேர் நகரத்திலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் தேஷ்னோக் எனுமிடத்தில் அமைந்த துர்க்கை கோயிலாகும். இக்கோயிலை எலிக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ணி மாதா கோயில்
கர்ணி மாதா கோயில்
கர்ணி மாதா கோயில் is located in இராசத்தான்
கர்ணி மாதா கோயில்
கர்ணி மாதா கோயில்
இராஜஸ்தான் மாநிலத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்:27°47′26″N 73°20′27″E / 27.79056°N 73.34083°E / 27.79056; 73.34083
பெயர்
பெயர்:Karni Mata Temple
தேவநாகரி:करणी माता मंदिर
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:இராஜஸ்தான்
மாவட்டம்:பிகானேர் மாவட்டம்
அமைவு:தேஷ்னோக், பிகானேர்
கோயில் தகவல்கள்
மூலவர்:துர்கை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:மொகலாய & ராஜபுத்திர கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:15 - 20-ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:மகாராஜா கங்கா சிங்

கர்ணி மாதா கோயிலில் ஏறத்தாழ 20,000 வழிபாட்டிற்குரிய கருப்பு எலிகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[1] இக்கோயில் மத்திய மற்றும் மேற்கு இந்தியாப் பகுதி மக்களின் ஆன்மீக சுற்றுலாத் தலமாக உள்ளது.

கட்டிடக்கலை

தொகு
 
சலவைக்கல்லால் ஆன கோயில்

கோயிலின் கட்டிட அமைப்பு முகலாயக் கட்டிடக்கலை மற்றும் இராஜபுத்திர கட்டிடக்கலையுடன் கட்டப்பட்டுள்ளது. பிகானேர் மன்னர் கங்கா சிங் என்பவர் இக்கோயிலை முதலில் கட்டினார்.

வழிபாடு

தொகு

பக்தர்கள் கர்ணி மாதா கோயிலின் மூலவர் துர்கையை வழிபடுவதுடன், கோயிலில் குடிகொண்டிருக்கும் எலிகளுக்கு பிடித்தமான இனிப்பு பலகாரங்கள், பால் போன்றவற்றை உணவாக வழங்கி வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்

தொகு

கர்ணி மாதா கோயில் திருவிழா ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படுகிறது.

  • முதல் பெரிய திருவிழா மார்ச் - ஏப்ரல் மாதத்தில் சித்திரை வளர்பிறை முதல் நாள் முதல் தசமி வரை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
  • இரண்டாம் திருவிழா செப்டம்பர் - அக்டோபர் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படுகிறது.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Langton, Jerry (2007). Rat: How the World's Most Notorious Rodent Clawed Its Way to the Top. Macmillan. pp. 125–128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-36384-2.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணி_மாதா_கோயில்&oldid=3802758" இலிருந்து மீள்விக்கப்பட்டது