கருநாடக சனதா கட்சி
கர்நாடக ஜனதா பக்ஷா (Karnataka Janata Paksha, KJP) அல்லது கருநாடக சனதா கட்சி தென்னிந்திய மாநிலம் கர்நாடகத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இதனை பத்மநாப பிரசன்னா என்பவர் துவக்கினார். இருப்பினும் 2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தக் கட்சியில் முன்னாள் கர்நாடக முதல்வர் பி. எஸ். எதியூரப்பா இணைந்து இதன் தலைமையை ஏற்றபிறகே பலராலும் அறியப்பட்டது. எதியூரப்பா நவம்பர் 30, 2012இல் தமது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினராக இருப்பதிலிருந்தும் விலகினார். திசம்பர் 9, 2012 அன்று கருநாடக சனதா கட்சியின் அவேரி மாநாட்டின்போது அக்கட்சியில் இணைந்தார். 2013ஆம் ஆண்டில் கருநாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இக்கட்சியைத் தலைமையேற்று வழிநடத்துவார்.[1][2][3][4] 2013 மார்ச்சு மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் முதன்முறையாகப் போட்டியிட்டு இக்கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதபோதும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு பெரும் பங்காற்றியது. [5]
கர்நாடக ஜனதா பக்சா (KJP) | |
---|---|
தலைவர் | பி. எஸ். எதியூரப்பா |
நிறுவனர் | பத்மநாப பிரசன்ன குமார் |
தொடக்கம் | 09 டிசம்பர் 2012, ஆவேரி |
கலைப்பு | 09 சனவரி 2014, பெங்களூரு |
இணைந்தவை | பாரதிய ஜனதா கட்சி |
பிரிவு | பாரதிய ஜனதா கட்சி |
தலைமையகம் | எண் 11, சாந்தி நகர், பெங்களூரு- 560055, கருநாடகம் |
கொள்கை | சமூக மக்களாட்சி |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (2013-2014) |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
http://kjpkarnataka.org/ | |
இந்தியா அரசியல் |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Yeddy's KJP Launched - Cine Stars, Leaders Join Amidst Gigantic Crowd". Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2013-03-17.
- ↑ BJP's new opponent in Karnataka is Yeddyurappa's KJP
- ↑ joining Karnataka Janata Party for sure, claims founder
- ↑ Dhananjay Kumar nominated KJP chief
- ↑ Manu Aiyappa (மார்ச்சு 12, 2013). "BJP's spoilers don't create big buzz". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2013.
வெளி இணைப்புகள்
தொகு- அலுவல்முறையான வலைத்தளம் பரணிடப்பட்டது 2013-03-25 at the வந்தவழி இயந்திரம்