கற்கும் பாரதம்

இந்தியாவின் புதிய எழுத்தறிவுத் திட்டம்

கற்கும் பாரதம் (saakshar Bharat) என்பது இந்திய அரசின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கிவைத்த திட்டம் ஆகும். இத்திட்டம் எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்குவதற்காகவும், புதியதான கற்றல் கற்பித்தல் முறைகளில் எழுத்தறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்குமான காெள்கையைக் கொண்டது. இந்தத் திட்டம் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் 2009 செப்தம்பர் 8 இல் தொடங்கப்பட்டது.[1]

கற்கும் பாரதம்
இணையத்தளம்saaksharbharat.nic.in

நோக்கம்

தொகு

இத்திட்டம் இந்தியத் தேசிய எழுத்தறிவுத் திட்டத்தின் குறிக்கோள் இலக்குகளை அடைவதற்காகவும், மறு ஆய்வு செய்வதற்காகவும் தொடங்கப்பட்டது. இதன்வழி 60 மில்லியன் பெண்கள் உட்பட 70 மில்லியன் வயது வந்தோர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளையும் கொண்டது. இது ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் உள்ள பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்படுகிறது.[2]

தேசிய எழுத்தறிவுத் திட்டம் ஒட்டுமொத்த எழுத்தறிவு வழங்குவதற்காக நாட்டிலுள்ள 597 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 485 மாவட்டங்களில் மேம்பட்ட எழுத்தறிவு வழங்கும் நிகழ்வுகளையும் 328 மாவட்டங்களில் தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறது. 2001 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 127 மில்லியன் வயது வந்தோர் இத்திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதில் 60 விழுக்காடு நபர்கள் பெண்களும், 23 விழுக்காடு தனியர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும், 12 விழுக்காடு மக்கள் பழங்குடியினரும் ஆவர்.[3]

வகைமை வயது வந்தோர் கல்வி மையம்

தொகு

'கற்கும் பாரதம்' வாயிலாக தெலுங்கானா மாநிலத்திலுள்ள கரீம் நகர் மாவட்டத்தில் மக்கள் கல்விக் குழுவை(லோக் சிக் ஷா சமிதி) (LOk Shiksha samithi)அமைத்து அதன்வழி ஆறு கிராமங்களைத் தேர்வு செய்து வகைமை வயது வந்தோர் கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது.[4] இம்மையம் வயது வந்தோருக்குக் கல்வி அறிவு வழங்கும் பொழுது ஒட்டுமொத்த சமுதாயத்தினரும் கல்வியறிவு பெற்றுவிடுவர் என்பதைக் கொள்கையாக கொண்டுள்ளது.

செயல்பாடுகள்

தொகு

வயது வந்தோர் கல்வியின் நோக்கம் கல்விக்கான வாய்ப்புகளைப் பரவலாக்கி முறையான கல்வி பெறாத வயது வந்தோருக்கு வாய்ப்புகளை வழங்குவதாகும். இதில் எழுத்தறிவு, அடிப்படைக் கல்வி, திறன் வளர்ச்சியால் சமனிலையை ஏற்படுத்துவதாகும். இத்திட்டத்தின்கீழ் தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு ஊரிலும் வயது வந்தோருக்கான எழுத்தறிவு மையம் அமைந்துள்ளது.

தமிழக மையங்கள்

தொகு

தமிழகத்தில் பெண்களுக்கான எழுத்தறிவு விகிதம் 50 விழுக்காட்டிற்கு குறைவாக உள்ள மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், விழுப்புரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக ஏராளமானவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது. வயது வந்தோர் ஓய்வு நேரத்தில் இருக்கும்பொழுது அந்தந்த ஊரிலுள்ள படித்தவர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. பாடம் நடத்துவதற்கென்று குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்படவில்லை. எழுத்துக்கூட்டி படிக்க விரும்புபவர்கள் எந்த இடத்திற்கு வரச்சொல்கிறார்களோ அந்த இடத்திற்குப் பாடம் நடத்துபவர்கள் சென்று கற்கின்றனர்.[5]

பாடங்கள்

தொகு

தமிழ், கணினியியல், சூழ்நிலையியல், பேரிடர் மேலாண்மை, தேர்தல் விழிப்புணர்வு, நிதி மேலாண்மை உள்ளிட்ட பல தலைப்புகளில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு விலையின்றி கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் தமிழகத்தில் பள்ளிச்சாரா கல்வி அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Hindu news report". Chennai, India. 2009-09-09 இம் மூலத்தில் இருந்து 2009-09-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090912035436/http://www.hindu.com/2009/09/09/stories/2009090950020100.htm. பார்த்த நாள்: 2009-09-09. 
  2. "New Kerala". பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  3. "Saakshar Bharath". Archived from the original on 2014-09-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-10.
  4. "Saakshar Bharat Mission selected 6 villages in Telangana". Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.
  5. http://www.padasalai.net/2017/07/20_15.html
  6. http://www.padasalai.net/2017/07/20_15.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்கும்_பாரதம்&oldid=3882300" இலிருந்து மீள்விக்கப்பட்டது