கலவித்திண்டு

கலவித்திண்டு (Nuptial pad)(கட்டைவிரல் திண்டு, அல்லது திருமண சுரப்பு என்றும் அறியப்படுகிறது[1]) என்பது சில முதிர்ந்த ஆண் தவளைகள் மற்றும் சாலமண்டர்களில் காணப்படும் இரண்டாம் நிலை பாலினப் பண்பு ஆகும்.[2][3][4][5] ஆண்ட்ரோஜன் இயக்குநீரால் தூண்டப்படும், இனப்பெருக்க சுரப்பி (ஒரு வகை சளி சுரப்பி) ஆகும். இது முன்கையில் கட்டைவிரலின் பக்கத்தில் காணப்படும் கூரான புறவணியிழைய வீக்கம் ஆகும். இது கலவியின் போது பெண் தவளையினை பிடியில் வைக்க உதவுகிறது.[6] சில சிற்றினங்களில் ஆண்-ஆண் சண்டைகளில் பயன்படுத்தப்படலாம்.[6]

பெலோபிலாக்சு எசுகுலெண்டசு கட்டைவிரலில் கலவித்திண்டு (சிவப்பு நிற அம்பு குறியிடப்பட்டுள்ளது).

வரலாறு

தொகு

ஆத்திரிய உயிரியலாளர் பால் கம்மரர் மருத்துவச்சி தேரைகளின் கலவித்திண்டில் ஆய்வுகள் மேற்கொண்டார். இலாமார்க்கியன் பரிணாம வளர்ச்சியின் சான்றாக, தலைமுறையிலிருந்து தலைமுறைக்குச் சந்ததியினரின் வெளிப்படையான விரிவாக்கத்தை இதன் மூலம் தெரிவித்தார்.[7]

பயன்பாடு

தொகு

பல நீர்நில சிற்றினங்கள் கலவியின்போது பெண் தவளைகளைப் பற்றக் கலவித் திட்டுகளைப் பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. William E. Duellman. Biology of Amphibians.
  2. "Science & Nature – Wildfacts – Common frog, grass frog". 2008-07-25.
  3. "Mertensiella caucasica". 1999-10-03.
  4. "Ommatotriton ophryticus". 2005-10-26.
  5. "Pleurodeles waltl". 2002-05-25.
  6. 6.0 6.1 F. Harvey Pough (2001). Herpetology.
  7. [1] பரணிடப்பட்டது செப்டெம்பர் 17, 2008 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவித்திண்டு&oldid=3848632" இலிருந்து மீள்விக்கப்பட்டது