கலாங் விரிகுடா

கலாங் விரிகுடா (ஆங்கிலம்: Ha Long Bay) என்பது வடக்கு வியட்நாம் பகுதியில் ஹனோய்க்குக் கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு கேட் பா தீவு, டாவ் பீ தீவு, டாவ் கோ தீவு, போ கான் தீவு என்பது போன்ற சுண்ணாம்புத் தீவுகள் பல காணப்படுகின்றன. இத்தீவுகளில் டாவ் கோ தீவுப் பகுதியில் சுண்ணக்கல் விழுதுகள், சுண்ணக்கல் புற்றுகள் கொண்ட 20 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான அழகிய நிறங்களுடைய குகைகள் பல இருக்கின்றன. இந்த விரிகுடாப் பகுதியில் மிதக்கும் கிராமங்கள் பல இருக்கின்றன. இங்கு மீன் பிடிக்கும் தொழில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் பகுதி “புதிய ஏழு உலக விந்தைகளுக்கான அறக்கட்டளை” அமைப்பு நடத்திய புதிய ஏழு இயற்கை உலக விந்தைகளுக்கான வாக்கெடுப்பில் இயற்கை ஏழு உலக விந்தைகளில் ஒன்றாகக் கடந்த நவம்பர் 11 2011 அன்று அறிவிக்கப்பட்டது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கலாங்கு விரிகுடா
புதிய 7 உலக இயற்கை விந்தைகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைஇயற்கை
ஒப்பளவுvii, viii
உசாத்துணை672
UNESCO regionஆசிய அமைதிப் பெருங்கடல் பகுதி
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1994 (18ஆவது தொடர்)
விரிவாக்கம்2000
கலாங் விரிகுடா is located in வியட்நாம்
கலாங் விரிகுடா
Location of கலாங் விரிகுடா in Vietnam.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாங்_விரிகுடா&oldid=2042707" இருந்து மீள்விக்கப்பட்டது