கலாம் செயற்கைக்கோள்
கலாம் செயற்கைக்கோள் (Kalam SAT) என்பது எடை குறைவான ஒரு சிறிய செயற்கை கோளாகும். இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக செயற்கைக்கோளுக்கு இப்பெயரிடப்பட்டது. இந்தியாவிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களால் இச்செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டது. 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஐடூடில் கற்றல் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பும் நாசாவும் இணைந்து நடத்தும் கியூப்சு இன் சுபேசு என்ற உலகாய அளவு போட்டியில் கலந்து கொண்டார்கள். இப்போட்டி அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதப் பாடங்களை இணைக்கும் கலைத்திட்டத்தின் அடிப்படையிலமைந்த ஒரு கல்வித்திட்டமாகும். தேர்வு செய்யப்பட்ட மாணவப் போட்டியாளர்கள் அணி நாசா ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்ப ஒரு செயற்கைக் கோளை வடிவமைக்கும் வாய்ப்பை வென்றது. இதன் தொடர்ச்சியாக இந்திய மாணவர்களால் உருவாக்கப்பட்ட கலாம் செயற்கைக்கோளும், போட்டியில் உருவாக்கப்பட மற்ற பல செயற்கைக் கோள்களும் நாசாவினால் டெரியர் ஓரியன் ஆராய்ச்சி ராக்கெட்டு மூலம் வர்கீனியாவிலுள்ள வாலோப்சு தீவிலிருந்து 2017 ஆம் ஆண்டு சூன் 22 அன்று விண்ணில் ஏவப்பட்டன[1][2][3][4][5][6][7][8].
கலாம் சோதனைக் கோளின் எடை 64 கிராம் ஆகும். இச்செயற்கைக்கோள் 3.8 செ.மீ அளவுள்ள கனசதுரத்தில் பொருத்தப்பட்டது. மேலும், இச்சோதனைக்கோள் முப்பரிமாணப் பொருட்கள் உற்பத்தித் தொழில் நுட்பத்துடன் கார்பன் இழை பலபடியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. துணை சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் ராக்கெட் மூலம் இச்செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிப் பயணத்திற்குப் பிறகான செயற்கைக்கோளின் திட்ட நேரம் சுமார் 240 நிமிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புவியீர்ப்பு விசை குறைந்த விண்வெளிச் சூழலில் முப்பரிமாண தொழில் நுட்ப கார்பன் இழையின் செயற்பாட்டை விளக்க 12 நிமிடங்கள் மட்டுமே இச்செயற்கைக் கோளை இயக்கமுடியும்.
சென்னையில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனமான இந்திய விண்வெளிக் குழந்தைகள் என்ற அமைப்பின் மூலம் கியூப்சு இன் சுபேசு என்ற உலகாய அளவு போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து இச்செயற்கைக் கோளை உருவாக்கினார்கள். தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமத் ரிசத் சாரூக் என்ற 18 வயது மாணவர் இரண்டு ஆண்டுகள் உழைத்து இச்செயற்கோளை வடிவமைத்தார். இவர் தானிசுக் திவேவ்டி, அப்துல் காசிப், கோபிநாத், யாக்னாசாய், வினய் எசு பரத்வாச் போன்ற மாணவர்களுடன் இணைந்து இச்சாதனையை நிகழ்த்தினார். இப்போட்டியில் கலந்து கொண்ட 80 மாதிரிகளில் ரிசத் சாருக்கின் வடிவமைப்பே தேர்ந்தெடுக்கப்பட்டது.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "18-year-old from Tamil Nadu designs world's lightest satellite". Srinivas Laxman, The Times of India. May 15, 2017. பார்க்கப்பட்ட நாள் May 15, 2017.
- ↑ "World's Lightest Satellite invented by Indian teen Rifath Sharook to be launched by NASA on 21st June". Aishwarya Krishnan, Penske Media Corporation. May 15, 2017. பார்க்கப்பட்ட நாள் May 15, 2017.
{{cite web}}
: Text "india.com" ignored (help) - ↑ "Tamil Nadu boy designs world's 'smallest' satellite for NASA". The Economic Times. May 15, 2017. Archived from the original on மே 19, 2017. பார்க்கப்பட்ட நாள் May 15, 2017.
- ↑ "NASA to launch world's lightest satellite built by Chennai student on June 21". Daily News and Analysis. May 15, 2017. பார்க்கப்பட்ட நாள் May 15, 2017.
- ↑ "World's Smallest Satellite Created for NASA by 18-Year-Old Indian Teen". Rachel Jacoby Zoldan, Teen Vogue. May 15, 2017. பார்க்கப்பட்ட நாள் May 15, 2017.
- ↑ "Meet the Indian teen who has developed world's smallest satellite for Nasa". Business Standard. May 15, 2017. பார்க்கப்பட்ட நாள் May 16, 2017.
- ↑ "KalamSat: Indian teen Rifath Sharook builds world's lightest and smallest satellite". Nupur Jha, International Business Times. May 15, 2017. பார்க்கப்பட்ட நாள் May 16, 2017.
- ↑ "KalamSat - World's smallest satellite built by Indian teen to be launched by NASA on June 21". Zee News. May 15, 2017. பார்க்கப்பட்ட நாள் May 16, 2017.