கலிங்கப் போர்

பண்டைய இந்தியாவில் மோதல்

கலிங்கப் போர் என்பது மௌரியப் பேரரசின் அசோகருக்கும் கலிங்க நாட்டுக்கும் இடையில் நடந்த போராகும், கலிங்க நாடு என்பது இந்திய ஒன்றியத்தில் அமைந்துள்ள தற்கால ஒடிசா மாநிலமாகும். அசோகருடன் போரிட்ட கலிங்க மன்னரின் பெயர் குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அரியனை ஏறியபிறகு அசோகர் செய்த மிகப்பெரிய ஒரே போர் இது ஆகும். உலகவரலாற்றில் இரத்த ஆறு பெருக்கெடுத்த போர்களில் இது ஒன்றாகும். சுதந்திர நாடான கலிங்க நாடு, அசோகரின் பேரரசுக்கு அடிபணிய மறுத்து அசோகரின் மிருகத்தனமான வலிமையான படையை எதிர்த்து இறுதி வரை தைரியமாக போராடியது. ஆனால் கடுமையாக போராடிய போதிலும், அவர்களால் அசோகரின் இராணுவத்துக்கு எதிராக சொற்ப எண்ணிக்கையில் இருந்த படைகளைக் கொண்டு சமாளிக்க இயலவில்லை.

கலிங்கப் போர்
நாள் கி.மு. அண்.  262 – அண். 261
இடம் கலிங்கம், இந்தியா
மௌரியர் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
'கலிங்க நாடு மௌரியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது
பிரிவினர்
மௌரியப் பேரரசு கலிங்கம்
தளபதிகள், தலைவர்கள்
அசோகர் கலிங்க மன்னர்
பலம்
மொத்தம் 400,000 60,000 காலாட் படை,[1]
10,000 குதிரைப்படை [2]700 யானைப் படை[1]
இழப்புகள்
100,000 200,000+ (எண்ணிக்கை அசோகர் தானே குறிப்பிட்டது)[3][4]
(பொதுமக்கள் உட்பட)

இந்த போரில் சிந்தப்பட்ட குருதியே புத்த சமயத்தை ஏற்க அசோகரைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. எனினும், அவர் வெற்றி பெற்ற பிறகு கலிங்க நாட்டை தனது மவுரியா பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Pliny the Elder (77 CE), Natural History VI, 22.1, quoting Megasthenes (3rd century BCE), Indika, Fragm. LVI.
  2. Roy, Kaushik. Military Manpower, Armies and Warfare in South Asia. Routledge, 2015. https://books.google.lk/books?id=q5JECgAAQBAJ&pg=PA9. பார்த்த நாள்: 17 August 2015. 
  3. அசோகர் (. 268–231 BCE), Edicts of Ashoka, Major Rock Edict 13.
  4. Radhakumud Mookerji (1988). Chandragupta Maurya and His Times. Motilal Banarsidass Publ. ISBN 81-208-0405-8.
  5. "Detail History of Odisha". Archived from the original on 2013-04-12. பார்க்கப்பட்ட நாள் 2017-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கப்_போர்&oldid=3548434" இலிருந்து மீள்விக்கப்பட்டது