கலிசிய-வோலினிய வரலாற்றுக் கூறு

கலிசிய-வோலினிய வரலாற்றுக் கூறு (Galician–Volhynian Chronicle, உக்ரைனியன்: Галицько-Волинський літопис) என்பது 1201–1292 காலகட்டத்தை பற்றிய வரலாற்றுப் பதிவாகும்.[1] அக்காலத்திய கலிசிய-வோலினிய சமஸ்தானத்தின் வரலாற்றைப்பற்றி இது கூறுகிறது. அச்சமஸ்தானம் தற்போதைய உக்ரைனில் அமைந்திருந்தது. இந்த வரலாற்றுக் கூறின் மூலம் கிடைக்கப்பெறவில்லை; தற்போது கிடைக்கப்பெறும் வரலாற்றுக் கூறு இப்பாதிய வரலாற்று கூறின் ஒரு பகுதியாக நமக்குக் கிடைக்கப் பெறுகிறது.[1] இதன் ஆசிரியர் கீவ் சமஸ்தானத்தின் மீதான கலிசியாவின் உரிமையை எடுத்துரைக்கிறார்.[2]

கலிசிய-வோலினிய வரலாற்று கூறு புத்தகம் (சிரில்லிக் எழுத்துமுறையில்)

இதன் முதல் பகுதி (கலிசியாவின் டானியல் பற்றியது) கோல்ம் நகரில் (இன்றைய போலந்தில்) எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.[3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Magocsi, Paul R. (1983). Galicia: A Historical Survey and Bibliographic Guide. University of Toronto Press. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8020-2482-3.
  2. Potichnyj, Peter J.; Marc Raeff; Jaroslaw Pelenski; Gleb N. Zekulin (1992). Ukraine and Russia in Their Historical Encounter: In Their Historical Encounter. CIUS Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-920862-84-5.
  3. Literature of the late Middle Ages. Izbornik.
  4. Perfecky, George A. (1973). The Galician-Volynian Chronicle. Munich: Wilhelm Fink Verlag. இணையக் கணினி நூலக மைய எண் 902306.
  5. Daniel Waugh (historian) (Dec 1974). "Review". Slavic Review 33 (4): 769–771. https://archive.org/details/sim_slavic-review_1974-12_33_4/page/769.