கலித் இக்பால் யாசிர்

பாக்கித்தான் எழுத்தாளர், கவிஞர்

காலித் இக்பால் யாசிர் (Khalid Iqbal Yasir உருது: خالد اقبال یاسر ) மார்ச் 13, 1952 இல் பிறந்த ஒரு எழுத்தாளர், அறிஞர்,[1][2] கவிஞர்,[3] மற்றும் பத்திரிகையாளர் ஆவார்.[4] வரலாறு, பொது அறிவு, விமர்சனம் மற்றும் கவிதை குறித்து பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.[5] தற்போது பஞ்சாப் பொது சேவை ஆணையத்தில் ஆலோசகராகவும் ( பாகிஸ்தான் ஆய்வுகள் ), ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் ஆலோசகராகவும், இஸ்லாமாபாத்தின் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார் .  

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

காலித் இக்பால் யாசிர் பாகிஸ்தானின் சர்கோதா மாவட்டத்தில் உள்ள வரலாற்று நகரமான பெராவில் பிறந்தார். பஞ்சாபி காவியங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் புகழ்பெற்ற கதாபாத்திரமான துல்லா பட்டி இவரது முன்னோடி ஆவார். அவர் 16 ஆம் நூற்றாண்டின் முகலாய பஞ்சாபின் ராபின் ஹூட் உடன் பிரித்தானிய வரலாற்றாசிரியர்களால் ஒப்பிடப்பட்டார். சர்கோதாவில் பள்ளிப் படிப்பினை முடிந்த பிறகு யாசிர் பஞ்சாப் பல்கலைக்கழகம், லாகூரில்வரலாற்றுப் பிரிவில் பட்டம் பெற்றார். பின் காயிட்-இ-அசாம் பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு, இவர் அல்லாமா இக்பால் திறந்தநிலை பல்கலைக்கழகம், இஸ்லாமாபாத்தில் உருதுவில் இ வர் எம். பில். பட்டம் பெற்றார். அதன் பிறகு இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் இவர் பி. எச். டி பட்டம் பெற்றார்.[6][7]

இலக்கிய வாழ்க்கை தொகு

யாசிர் சங் - மீல் எனும் கைப் பிரதியினை தனது சிறு வயதில் வெளியிட்டார். தனது கல்லூரிக் காலங்களில் எத்சாப் மற்றும் இதிகியாஸ் எனும் இரு இதழ்களில் பதிப்பாளர் பணியினை மேற்கொண்டார்1 981 இல் இஸ்லாமாபாத்தின் பாகிஸ்தான் அகாடமி ஆஃப் லெட்டரில் துணை இயக்குநராகவும் ஆசிரியராக சேர்ந்தார்.[8][9] 2001 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இவர் உருது அறிவியல் கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[10] அங்கு அவர் உருது மொழியில் 350 க்கும் மேற்பட்ட சமூக அறிவியல், அடிப்படை அறிவியல், தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக பிரிவுகளைப் பற்றி நூல்களை எழுதி வெளியிட்டார். 2009 மற்றும் 2012 க்கு இடைப்பட்ட காலங்களில் பாகிஸ்தான் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ், தேசிய கல்வி கருவி மையம், லாகூரின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஆகியவற்றின் இயக்குநராக அவர் பணியாற்றினார். அவர் இறுதியாக மார்ச் 2012 இல் லாகூரின் உருது அறிவியல் வாரியத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

நூற்பட்டியல் தொகு

கவிதைகள் தொகு

19990 ஆம் ஆண்டில் தரோபாஸ்ட் மற்றும் 2000 இல் கர்டிஷ், 2005 மற்றௌம் 2012 ஆம் அண்டுகள் முறையே இவர் ருக்சக்தி மற்றும் மிசாஜ் ஆகிய கவிதைகளை எழுதினார்.[11][12]

ஆராய்ச்சி மற்றும் விமர்சனம் தொகு

1993 ஆம் ஆண்டில் அவல்- ஓ-அசர் மற்றும் 1994 இல் இக்பால் மற்றும் தற்கால இலக்கிய இயக்கங்கள் எனும் ஆராய்ச்சி நூல் ஒன்ரினை வெளியிட்டார்.

மொழிபெயர்ப்பு தொகு

1995 ஆம் ஆண்டில் ஆண்டஸ், அதே ஆண்டில் மிகாபத் ரோசன் ரெதி ஹே ஆகிய நூல்களைக மொழிபெயர்த்தார். 2000 ஆம் ஆண்டில் டெல்பி ஹா மற்றும் 2001 அம் ஆண்டில் போலந்து கீ இஸ்கியா சைரீ மற்றும் அல்கெமிஸ்ட் ஆகிய இரு நூல்களை மொழிபெயர்த்தார்.

விருதுகள் தொகு

தம்கா-இ-இம்தியாஸ் (2010) [1][13]

தேசிய புத்தக கவுன்சில் கையெழுத்து விருது (1993)

தேசிய புத்தக கவுன்சில் கையெழுத்து விருது (1990)

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Pakistan Today, News. "Khalid Iqbal comes in as new PAL DG". Pakistan Today. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015. {{cite web}}: |first= has generic name (help)
  2. Danka.pk, Events. "A DIALOG WITH KHALID IQBAL YASIR". Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Khalid Iqbal Yasir, Ghazal. "Khalid Iqbal Yasir Poetry". rekhta.org. Rekhta. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  4. Khalid Iqbal, Yasir. "Gardish". nawaiwaqt.com.pk. Nawa-e-Waqt, Pakistan. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  5. Bank, Saeed Books. "Saeed Books Catalog". saeedbookbank.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  6. Phd Degree, Islamia University. "PhD degree by Islamia University Bahawalpur in Urdu and Iqbaliyat". pakedu.net. pakedu.net. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  7. Islamia University of Bahawalpur, Pakistan. "57th meeting of Board of Advanced Studies and Research (BASAR) at Abbasia Campus". iub.edu.pk. Public Relations Office. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. Tribune, The Express. "Assuming Charge: Khalid Iqbal Yasir new DG of PAL". tribune.com.pk. tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  9. The News, International. "Khalid Iqbal Yasir takes over as DG Academy of Letters". www.thenews.com.pk. The News. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  10. The Nation, Newspaper. "Khalid Iqbal new DG of Urdu Science Board". nation.com.pk. The Nation Newspaper. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  11. Pakistani literature into foreign languages, PAL. "The launching ceremony of Khalid Iqbal Yasir's long poem 'Rukhsati'". interface.edu.pk. interface.edu.pk. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  12. The News, International. "'Rukhsati' launched". The News International இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225102521/https://www.thenews.com.pk/archive/print/441330-germany%C3%A2%C2%80%C2%99s-world-champs-prove-their-form. பார்த்த நாள்: 22 March 2015. 
  13. Facebook Page, Khalid Iqbal Yasir's. "Tamgha e Imtiaz Certificate". facebook.com. facebook. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015. {{cite web}}: |last= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலித்_இக்பால்_யாசிர்&oldid=3924803" இலிருந்து மீள்விக்கப்பட்டது