கலிப்

இந்திய உருதுக் கவிஞர்

கலிப் (உருது: غاؔلب‎; இந்தி: ग़ालिब) இயற்பெயர் "மிர்சா ஆசத்துல்லா பய்க் கான்" (உருது: مرزا اسد اللہ بیگ خان; இந்தி: मिर्ज़ा असदुल्लाह् बेग ख़ान) (27 டிசம்பர் 1797 – 15 பிப்ரவரி 1869)[1][2] என்பவர் முகலாயப் பேரரசின் கடைசி ஆண்டுகளில் ஒரு முக்கியமான உருது மற்றும் பாரசீக மொழிக் கவிஞர் ஆவார். இவர் முகலாயச் சகாப்தத்தின் கடைசிப் பெரிய கவிஞர் ஆவார். இவர் இந்தியா மற்றும் பாக்கித்தானில் மட்டும் அல்லாது இந்தி மொழி பேசும் புலம்பெயர்ந்தோரின் நடுவிலும் பிரபலமானவராக உள்ளார். இவரது வாழ்நாளில் முகலாயப் பேரரசு மறையத் தொடங்கியது. பிரித்தானியாவால் இடமாற்றம் செய்யப்பட்டது. கடைசியாக 1857ல் சிப்பாய்க் கிளர்ச்சியின் தோல்விக்குப் பிறகு பதவி இறக்கப்பட்டது. இதைப் பற்றியும் இவர் எழுதியுள்ளார்.

மிர்சா கலிப்
مرزا غاؔلب
मिर्ज़ा ग़ालिब
இயற்பெயர்
مرزا اسد اللہ بیگ خان
பிறப்பு27 டிசம்பர் 1797
கலா மஹால், ஆக்ரா, முகலாயப் பேரரசு
இறப்பு15 பிப்ரவரி 1869 (அகவை 71)
கலி காசிம் ஜான், பள்ளிமரன், சாந்தினி சவுக், (தற்போது கலிப்பின் ஹவேலி, தில்லி, இந்தியா)
புனைபெயர்கலிப்
தொழில்கவிஞர்
தேசியம்பிரித்தானிய இந்தியர்
காலம்முகலாயச் சகாப்தம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
வகைகசல், காசிடா, ருபை, காடா
கருப்பொருள்மெய்யியல், உள்ளுணர்வு

வாழ்க்கை

தொகு
 
கலிப்பின் மாளிகை, தற்போது ஒரு அருங்காட்சியகம், பள்ளிமரன், பழைய தில்லி
 
மிர்சா கலிப்பின் ஆடைகள், கலிப் அருங்காட்சியகம்
 
ஒரு சிறப்பு நினைவுச் சின்ன அட்டை.

இவர் அய்பக் துருக்கியர்களின் வழிவந்தவர் ஆவார். அய்பக் துருக்கியர்கள் செல்ஜுக் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு சமர்கந்திற்கு இடம்பெயர்ந்தனர். இவரது தந்தைவழி தாத்தா மிர்சா கோகன் பய்க் கான் ஒரு செல்ஜுக் துருக்கியர் ஆவார். அவர் அகமது ஷாவின் (1748-54) ஆட்சிக்காலத்தின்போது சமர்கந்தில் இருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார். லாகூர், தில்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பணியில் இருந்தார். பகசு (புலந்சாகர், உ.பி.) துணை மாவட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் கடைசியாக ஆக்ரா, உ.பி.யில் குடியேறினார். அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். மிர்சா அப்துல்லா பய்க் கான் மற்றும் மிர்சா நசுருல்லா பய்க் கான் ஆகியவை அவரது இரண்டு மகன்களின் பெயர்கள் ஆகும். கலிப்பின் தந்தையான மிர்சா அப்துல்லா பய்க் கான் இவரது தாயான காஷ்மீர் இன இசாத்-உத்-நிசா பேகத்தைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் அவரது மாமனாரின் இல்லத்தில் வசித்தனர். இவரது தந்தை முதலில் லக்னோ நவாப்பிடமும் பிறகு ஐதராபாத் நிசாமிடமும் பணியாற்றினார். 1803ல் அல்வரில் நடந்த போரில் இறந்தார். ராஜ்கரில் (அல்வர், இராஜஸ்தான்) புதைக்கப்பட்டார். அப்போது கலிப்புக்கு ஐந்து வயதாகி இருந்தது. இவர் முதலில் இவரது மாமா மிர்சா நசுருல்லா பய்க் கானால் வளர்க்கப்பட்டார். இவர் தன் பதிமூன்றாம் வயதில் உம்ரோ பேகத்தைத் (பெரோஸ்பூர், சிர்கா நவாப்பின் சகோதரரான நவாப் இலாஹி பக்சின் மகள்) திருமணம் செய்தார். பிறகு இவர் தன் தம்பி மிர்சா யூசுப் கானுடன் தில்லிக்கு இடம்பெயர்ந்தார். இவரது தம்பிக்கு சிறுவயதிலேயே மனப்பித்து ஏற்பட்டது. 1857 கிளர்ச்சியின் போது இவரது தம்பி இறந்தார். இவருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்தன. இவர் தனது ஒரு கடிதத்தில் திருமணத்தை இரண்டாவது சிறைதண்டனை என்று குறிப்பிட்டுள்ளார். முதல் தண்டனை என்று வாழ்க்கையைக் குறிப்பிட்டார். வாழ்க்கை என்பது வலிமிகுந்த போராட்டம், அப்போராட்டம் வாழ்க்கை முடியும்போதுதான் முடிகிறது என்ற கருத்து இவரது கவிதகளின் முக்கியமான கருத்தாக இருந்துள்ளது.

உசாத்துணை

தொகு
  1. வர்மா, பவன் (1989). கலிப், மனிதன், காலங்கள். புது தில்லி: பென்குயின் புத்தகங்கள். p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-011664-8.
  2. "மிர்சா ஆசத்துல்லா கான் கலிப்". பிரித்தானிகா. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 27, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிப்&oldid=2711712" இலிருந்து மீள்விக்கப்பட்டது