கலு லால் குர்ஜார்
கலு லால் குர்ஜார் (Kalu Lal Gurjar) (பிறப்பு 1 மே 1953) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் தற்போதைய இராசத்தான் குஜார் மகாசபையின் தலைவரும் ஆவார். 2013 முதல் 2018 வரை ராஜஸ்தான் சட்டமன்றத்தில் அரசு தலைமைக் கொறடாவாகப் பணியாற்றி உள்ளார். வசுந்தரா ராஜே தலைமையிலான மாநில அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும் முன்னாள் முதலமைச்சர் பைரோன் சிங் செகாவத் தலைமையிலான அரசாங்கத்தில் சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் துறை இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1] இவர் பில்வாரா மாவட்டம், மண்டல் சட்டமன்ற தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் குஜார் தேவ்நாராயண் நற்பணி மன்றத்தின் தலைவராகவும் உள்ளார்.
கலு லால் குர்ஜார் | |
---|---|
முன்னாள் சுரங்கத்துறை அமைச்சர், இராசத்தான் அரசு | |
பதவியில் 14 மார்ச்சு 1990 – 15 திசம்பர் 1992 | |
முன்னையவர் | ஹரி தேவ் ஜோஷி |
பின்னவர் | ஆளுநர் ஆட்சி |
உறுப்பினர் | |
பதவியில் மார்ச்சு 1990 – 1998 | |
முன்னையவர் | பிகாரி லாவ் பரீக் |
பின்னவர் | ஹப்ஜி முகமது |
தொகுதி | மண்டல் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2003–2008 | |
முன்னையவர் | ஹப்ஜி முகமது |
பின்னவர் | இராம் இலால் |
தொகுதி | மண்டல் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வார்ப்புரு:1 மே 1953 மண்டல்,இராசத்தான், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சரோஜ் தேவி குஜார் |
பிள்ளைகள் | 4 மகள்கள் |
முன்னாள் கல்லூரி | எம்.எல்.வி கல்லூரி, பில்வாரா |
வேலை | அரசியல்வாதி |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுகுஜார், 1 மே 1953 அன்று இராசத்தான் மாநிலத்தின் குர்லான் கிராமத்தில் ரூபி தேவி குஜார் மற்றும் கங்கா ராம் குஜார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[2] இவர் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் இருவரும் விவசாயிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை குர்லான் கிராமத்தில் முடித்த இவர் தனது நடுநிலைக் கல்வியை இராசத்தானின் மற்றொரு கிராமமான கேடர்மாலாவில் முடித்தார். பின்னர் புர் மேல்நிலைப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார்.[3] பின்னர் பில்வாராவில் உள்ள எம். எல். வி அரசு கல்லூரியில் சேர்க்கை பெற்று பல்கலைக்கழகத்திற்கு முந்தைய வகுப்பை முடித்தார். 1976 ஆம் ஆண்டு பி.ஏ. (Hon ' s) எல். எல். பி வரை அதே கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பில்வாரா மாவட்ட நீதிமன்றத்தில் பயிற்சியைத் தொடங்கிய அவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
தொகுதனது 29 வயதில் அரசியலில் நுழைந்த குஜார் 1982 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். மேலும், பில்வாராவிலிருந்து பாஜக மாவட்ட பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 1985 இல் மண்டல் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசின் பிஹாரி லால் பரீக்கிடம் தோற்றார். 1990 ஆம் ஆண்டில், குஜார் மீண்டும் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கான விதான் சபா தேர்தலில் பாஜகவிலிருந்து, மண்டல் விதான் சபா தொகுதியிலிருந்து போட்டியிட்டு 14,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் இராசத்தான் அரசாங்கத்தில் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத் தலைமையில் சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் துறையின் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றினார்1993 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் மண்டல் தொகுதியில் இருந்து 13,416 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரசின் ஹபீஸ் முகமதுவை தோற்கடித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகலு லால், சரோஜ் தேவி குஜார் என்பவரை மணந்தார். இவரது மனைவி சுவனா ஊராட்சி ஒன்றிய தலைவராக தொடர்ச்சியாக பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்த இணையருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Govt Chief Whip, RLA". Archived from the original on 2018-05-20. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
- ↑ "Sh Kalu Lal Gujar Biography – About, Personal Background, Political and Professional Career". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.
- ↑ "Kalu Lal Gurjar Biography in Hindi: About Family, Political life, Age, Photos | Patrika". Patrika News (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)