கலைஞர் நூற்றாண்டு நூலகம்

கலைஞர் நூற்றாண்டு நூலகம் (Kalaignar Centenary Library) என்பது தமிழ்நாடு அரசின் சார்பில் மதுரை மாவட்டம் புது நத்தம் சாலையில் நிறுவப்பட்ட நூலகம் ஆகும்.[1]

கலைஞர் நூற்றாண்டு நூலகம்
நாடு இந்தியா
வகைபொது நூலகம்
தொடக்கம்சூலை 15, 2023
அமைவிடம்புது நத்தம் சாலை, மதுரை, தமிழ் நாடு
அமைவிடம்9°56′29″N 78°08′09″E / 9.9413°N 78.13571°E / 9.9413; 78.13571
Collection
Items collectedநூல்கள், ஆய்விதழ்கள், இதழ்கள், பிரெயில் படைப்புகள், கையெழுத்துப் படிகள், மின்நூல்கள்
அளவு3.5 லட்சம்
சேகரிப்புக்கான அளவுகோல்உலகெங்கிலும் உள்ள முன்னணிப் பதிப்பகங்களின் நூல்கள்
இணையதளம்www.kalaignarcentenarylibrary.org
Map
Map

வரலாறு

தொகு

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு மு. க. ஸ்டாலின் முதலமைச்சராகக் கொண்டு பதவியேற்ற அரசு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு நினைவாக ரூபாய் 206 கோடி செலவில் மதுரை மாநகரில் நூலகம் அமைக்கத் திட்டமிட்டது. இதன் தொடர்ச்சியாக 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நூலக கட்டுமானப் பணிகள் துவங்கியது. இந்நூலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்நூலகத்தினை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சூலை 15, 2023 அன்று திறந்துவைத்தார்.[2][3]

சிறப்பம்சங்கள்

தொகு

இந்நூலகம் சுமார் 206 கோடி ரூபாய் செலவில் 6 தளங்களுடன் 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 இலட்சம் புத்தகங்கள் வைக்க வசதியுடன் அமைக்கப்பட்ட இந்நூலகத்தில் தற்பொழுது 3.5 இலட்சம் புத்தகங்கள் உள்ளன. புத்தகங்கள் அனைத்தும் எண்ணிம வடிவில் வகைப்படுத்தி அடுக்கப்பட்டுள்ளன, எனவே வாசகருக்குப் புத்தகத்தின் இருப்பை அறிந்து, தேடுவது எளிதாகும்.[2]

தளம் விவரம் இதர வசதி
தரைத்தளம் மாற்றுத் திறனாளிகளுக்கானது
முதல் தளம் குழந்தைகள் நூல் சிறுவர் திரையரங்கம், கலையரங்கம், மாதிரி வானூர்தி, எண்ணிம திரைகள்
இரண்டாம் தளம் தமிழ் நூல்கள்
மூன்றாம் தளம் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் தமிழ்நூல்கள் சில இங்கு உள்ளன
நான்காம் தளம் போட்டித் தேர்வுகளுக்கான நூலகப்பகுதி
ஐந்தாம் தளம் பார்வையற்றவர்களுக்கான நூல்கள் மின்னூல், ஒலிநூல்
ஆறாம் தளம் மேற்கோள் நூல்கள் நிர்வாகப் பகுதி

இந்நூலகம் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்த பெரிய நூலகமாகத் தமிழகத்தில் உள்ளது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.vikatan.com/government-and-politics/politics/madurai-kalaingar-centenary-library-photo-album
  2. 2.0 2.1 தினத்தந்தி (2023-07-14). "தென்னகத்தின் களஞ்சியம்: கலைஞர் நூற்றாண்டு நூலகம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  3. "மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்". Hindu Tamil Thisai. 2023-07-15. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.