கலை இலக்கியா

கலை இலக்கியா (இறப்பு: 06 மே 2019) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் ச. இந்திரா ஆகும். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கலை இலக்கியா, சிற்றிதழ்கள் வழியாக எழுத்தாளராகப் பரிணமித்தவர். இவர் கட்டுரையாளர், கவிஞர் மற்றும் சிறுகதையாளராக அறியப்படுகிறார். தேனி மாவட்டம், ஜெயமங்கலம் ஊரைச் சேர்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு, தேனி மாவட்டம், வீரபாண்டி எனும் ஊரில் கணவருடன் வசித்து வருகிறார். தமிழில் வெளியாகும் பல சிற்றிதழ்களில் இவரது கவிதை மற்றும் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தில் முக்கியப் பெண் கவிஞர்களில் இவரும் ஒருவர். இவர் மே 6, 2019 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.[1]

கலை இலக்கியா
பிறப்புச. இந்திரா
ஜெயமங்கலம், பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
இறப்புமே 06, 2019
இறப்பிற்கான
காரணம்
உடல் நலக்குறைவு
இருப்பிடம்வீரபாண்டி, தேனி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்இ. சன்னாசி (தந்தை),
அன்னகாமு (தாய்)
வாழ்க்கைத்
துணை
சி. காமுத்துரை
பிள்ளைகள்சிவபாரதி (மகன்),
இராஜேஸ் கபிலன்(மகன்)
உறவினர்கள்மூன்று சகோதரர்கள்

எழுதியுள்ள நூல்கள் தொகு

  1. இமைக்குள் நழுவியவள் (கவிதைகள்)
  2. பிரம்ம நிறைவு (கவிதைகள்)
  3. படிக்க பின்பற்ற காதலும் வீரமும் (கட்டுரைகள்)
  4. என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன் (கவிதைகள்)
  5. ஒப்பாரி பாடல்கள் (மரபுப் பாடல் திரட்டு)
  6. பெண்மைத்தினவு
  7. காமக்கடல் நீந்தி

மேற்கோள்கள் தொகு

  1. ""பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை". விகடன் (07 மே, 2019)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை_இலக்கியா&oldid=3708756" இலிருந்து மீள்விக்கப்பட்டது