கலோதாமசு
கலோதாமசு கரோலினசு, கரோலினிசு கிளி மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லேப்ரிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கலோதாமசு

கில்பெர்ட், 1890
மாதிரி இனம்
கலோதாமசு சீனோடான்
கில்பெர்ட், 1890[1]
சிற்றினங்கள்

5, உரையினை காண்க

கலோதாமசு (Calotomus) என்பது இந்தோ பசிபிக் பகுதியைச் சேர்ந்த ஒரு கிளி மீன் பேரினமாகும். இது கிழக்கு அமைதிப் பெருங்கடலில் வெப்பமான பகுதிகளில் காணப்படும் ஒரு சிற்றினம் உள்ளது. இவற்றின் பெரும்பாலான சிற்றினங்களை ஒப்பிடும்போது, இவற்றின் நிறங்கள் ஒப்பீட்டளவில் மந்தமானவை. இந்த பேரினத்தில் உள்ள பல சிற்றினங்கள் கடற்புல் படுக்கைகளுடன் தொடர்புடையவை. ஆனால் பெரும்பாலானவை பவளப் படிபாறைகளிலும் காணப்படுகின்றன.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் கீழ்க்கண்ட சிற்றினங்கள் அடங்கும்:

  • கலோதாமசு கரோலினசு (வலென்சினென்சு, 1840) (கரோலின்சு கிளிமீன்)
 
கரோலின் கிளிமீன் (க. கரோலினசு)-பெண்
 
கரோலின் கிளிமீன் (க. கரோலினசு)-ஆண்
  • கலோதாமசு ஜபோனிகசு (வலென்சியென்சு, 1840) (சப்பானிய கிளி மீன்)
  • கலோதாமசு ஸ்பினிடென்சு (குவோய் & கைமார்ட், 1824) (முள்பல் கிளி மீன்)
  • கலோதாமசு விரிடெசென்சு (உருபெல், 1835) (பச்சை நிற கிளி மீன்)
  • கலோதாமசு சோனார்கசு (ஜென்கின்ஸ், 1903) (மஞ்சள் பட்டை கிளி மீன்)

அழிந்துபோன சிற்றினமாக, கலோதாமசு பிரிசிலி ஆத்திரியாவில் நடுத்தர மியோசீன் படுக்கைகளிலிருந்து மீட்கப்பட்டது. பரதேதிசு கடல் வெப்பமண்டலமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலோதாமசு&oldid=3735862" இலிருந்து மீள்விக்கப்பட்டது