கல்ஜானி ஆறு

பங்களாதேஷில் ஒரு நதி

கல்ஜானி ஆறு (Kaljani River) ( வங்காள மொழி: কালজানী ) டோர்ஷா நதியின் துணை ஆறாகும், இது இமயமலையின் அடிவாரத்தில் பூட்டானில் உருவாகி (26°50'24"N 89°26'28"E) இது பூட்டான் மற்றும் இந்தியா வழியாக வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்து (26°16'25"N 89°35'01"E) தோர்ஷா ஆற்றுடன் சங்கமித்து மீண்டும் பிரம்மபுத்திரா ஆற்றுடன் சங்கமிக்கிறது. இது பத்மா நதியுடன் வங்காள விரிகுடாவுடன் கலக்கிறது. கல்ஜானி ஆற்றின் முக்கிய துணையாறுகள் [ [1] ] டிமா, நோனை போன்றவை தூவார்சின் எழில் மிகு பிரதேசங்களாகின்றன. ஆற்றின் பெரும்பகுதி இந்திய மாநிலமான மேற்கு வங்கம் வழியாக பாய்கிறது. 1993 ஆம் ஆண்டில், இதன் கரையில் உள்ள அணையின் தடுப்புச் சுவர் கசிந்து, இடிந்து அலிபுர்துவார், ஹமில்தங்கஞ்ச் போன்ற நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் நகருக்குள் நூற்றுக்கணக்கான மக்களையும் விலங்குகளையும் கொல்லப்பட்டனர்.

கல்ஜானி ஆறு
கல்ஜானி வடக்கு வங்காளத்தின் ஆறுகளுக்குள் காட்டப்பட்டுள்ளது

கரையில் உள்ள முக்கிய இடங்கள்

தொகு

புயென்சோலிங், ஜெய்கான், ஹமில்தங்கஞ்ச், நிம்தி, தக்சின் பரஜோர் காடு, அலிப்பூர்துவார், சிலாகனா ஆகியவை கல்ஜானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சில இடங்கள்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்ஜானி_ஆறு&oldid=4109103" இலிருந்து மீள்விக்கப்பட்டது