கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி

இந்தியாவின் அரியானாவில் உள்ள அரசு மருத்துவமனை

கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி (Kalpana Chawla Government Medical College) இந்திய மாநிலமான அரியானாவின் கர்னால் நகரில் செயல்பட்டு வரும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகும்.[1][2]

கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி
குறிக்கோளுரைसर्वे भवन्तु सुखिनःஅனைவரும் மகிழ்ச்சியுடன் வாழட்டும் । सर्वे सन्तु निरामयाः அனைவருக்கும் அமைதி நிலவட்டும்
வகைபொது மருத்துவமனை
உருவாக்கம்2017
சார்புபண்டிட் பகவத் தயால் சர்மா, சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
நிதிக் கொடைஓராண்டுக்கு 11.24 பில்லியன் (US$140 மில்லியன்)
நிதிநிலைரூ 645.77 கோடி
தலைவர்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், அரியானா அரசு
பணிப்பாளர்மருத்துவர் ஜே. சி. துரேஜா
அமைவிடம்
கர்னால், இந்தியா
சேர்ப்புஇந்திய மருத்துவக் கழகம்
இணையதளம்www.kcgmc.edu.in
இந்திய விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லாவின் நினைவாக இக்கல்லூரிக்கு அவரது பெயரிடப்பட்டது

வரலாறு தொகு

இதன் கட்டுமானம் 2013இன் பிற்பகுதியில் தொடங்கி, முடிவடைந்து, வெளிநோயாளிகளின் பிரிவையும், மருத்துவமனையையும் கொண்டு முழு அளவில் செயல்படுகிறது.

அங்கீகாரம் தொகு

இந்த மருத்துவக் கல்லூரி அரியானாவின் ரோத்தக், பண்டிட் பகவத் தயால் சர்மா, சுகாதார அறிவியல் பல்கலைக்கழக இணைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 120 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவமனை தொகு

இந்த மருத்துவக் கல்லூரி, கர்னல் அரசு மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும். கற்பித்தலுக்கான மருத்துவமனையாக செயல்படுகிறது. விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் நினைவாக அரியானா அரசு கல்லூரிக்கு இவரது பெயரிட்டது.

கோவிட் மையம் தொகு

கோவிட் தொற்றுநோயால் லேசான மற்றும் மிதமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை மையமாகவும், மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காகவும் அரியான அரசு இந்த மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Three committees constituted for monitoring works relating to Kalpana Chawla university". Uniindia.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017.
  2. "அமெரிக்காவின் ஒபாமா கேரும், இந்தியாவின் மோதி கேரும்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  3. "Covid care only at Karnal's Kalpana Chawla hospital". பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.