கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி
கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பகுதியிலுள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையாக உயர்ந்து நிற்கும் இப்பாடசாலை மாணவர் விடுதி உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.
கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி | ||||
[[படிமம்:|250px|]] | ||||
| ||||
குறிக்கோள் | Luceat, (ஒளிருவாய்) | |||
அமைவிடம் | ||||
நாடு | இலங்கை | |||
மாகாணம் | கிழக்கு மாகாணம் | |||
மாவட்டம் | அம்பாறை | |||
நகரம் | கல்முனை | |||
இதர தரவுகள் | ||||
ஆரம்பம் | 1900 | |||
www.carmelfatimacollege.org |
வரலாறு
தொகுகல்முனையில் கத்தோலிக்க மறைபரப்பாளர்களின் கல்விப்பணி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தொடக்கியது. (இதற்கு முன்னதாக உவெஸ்லியன் மறைபரப்பாளர் கல்முனையில் கல்விப்பணி புரிந்து வந்தனர்). புனித மேரிக் கல்லூரி மற்றும் ஆண்களுக்கான பாடசாலை ஒன்றும் கல்முனை புனித இருதய நாதர் தேவாலயத்தில் கத்தோலிக்க மறைபரப்பாளர்களால் இயங்கி வந்ததது. 1938 இன் பிற்பகுதியில் புனித சூசையப்பர் சங்க அருட் சகோதரர்கள் இப்பாடசாலையைப் பெறுப்பேற்றனர். 1950இல் இப்பாடசாலை பாற்றிமாக் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது.
1928 சூலை18 இல் கார்மேல் பெண்கள் பாடசாலை கல்முனையில் நிறுவப்பட்டது. 1958 இல் இது கார்மேல் உயர் பள்ளியாக தரமுயர்ந்தது. 1960களில் மாணவர் தொகைக்கேற்ப அரசு பாடசாலைகளை உயர் மத்திய பள்ளிகளாகத் தரமுயர்த்தியது. இந்நோக்கத்திற்காக மக்களின் வேண்டுகோளின்படி பாற்றிமாக் கல்லூரியும் கார்மேல் பெண்பள்ளியும் ஒன்றிணைக்கப்பட்டு கார்மேல் பற்றிமாக் கல்லூரி உருவாக்கப்பட்டது.
கல்லூரிக் கீதம்
தொகு- கார்மேல் பற்றிமாக் கல்லூரி இறையருளிலே
- பாரிலொளி வீச வேண்டும் தங்கக் கதிரிலே
- மங்கிடாதன்னொளி பொங்க என்றும் வாழவே
- செங்கழல் பொன்மலர் கொண்டு போற்றினோமே.
- கார்மேல் பற்றிமாக் கல்லூரி இறையருளிலே
- ஒளிருவாய் ! ஒளிருவாய் ! ஒளிருவாய்!
- எங்கள் கலைக்கோயில் கார்மேல் பற்றிமா
- உந்தன் ஒளிபரப்பி ஈழமணிநாடு மிளிரவே
- எந்த நாளும் இன்புடனே இயங்குவாய்...
- கார்மேல் பற்றிமாக் கல்லூரி இறையருளிலே
- ஒளிருவாய் ! ஒளிருவாய் ! ஒளிருவாய்!
- தூய்மை நேர்மை என்பன உன் கொள்கையே
- தாயாம் ஈழம் நிறைவுறத் தன்னிகரில் சேவையே
- நேயமாக ஆற்றி நீடு வாழ்கவே...
- கார்மேல் பற்றிமாக் கல்லூரி இறையருளிலே
- ஒளிருவாய் ! ஒளிருவாய் ! ஒளிருவாய்!
வெளி இணைப்புகள்
தொகு- கார்மேல் பற்றிமாக் கல்லூரி பரணிடப்பட்டது 2013-12-17 at the வந்தவழி இயந்திரம்