கல்யாணி நாயர்
கல்யாணி நாயர் (Kalyani Nair) இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த ஓர் பாடகியாவார். இ இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணி புரிகிறார். பள்ளி மாணவியாக இருக்கும்போதே, இவர் முதன்முதலில் கைரளி தொலைக்காட்சியில் சிம்பொனி என்ற நிகழ்ச்சியில் தோன்றினார்.மாசிலாமணி என்ற படத்தில் இவர் பாடிய "டோரா டோரா அன்பே டோரா " என்ற பாடலும், பார்த்திபன் கனவு என்ற படத்தில் இடம் பெற்ற "பக் பக் பக் ஹே மாடப்புறா", தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படத்தில் "ஹே கொலைகாரா அனலாச்சு" என்ற பாடலும், எம் மகன் படத்தின்" குண்டு குண்டு கண்ணு" பாடலும் மிகவும் பிரபலமானது.
இவர், கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பாடகர் ஹரிஹரன் ஒரு விழாவில் பாடியபோது இவருடைய குரலை பிரகாசமான எதிர்காலம் கொண்டதாக விவரித்தார்.[1]
தொழில்
தொகுஇவரது தந்தை, யு. ஜி. குமார் இராணுவத்தில் பணிபுரிந்ததால் பெரும்பாலும் வட இந்தியாவில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். இவருடைய மாமா ஒரு இசைக்கலைஞர் என்பதால் இவர் இந்துஸ்தானி இசையைக் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சென்னையில், பின்னி கிருஷ்ணகுமார் என்பவர் இவரது ஆசிரியராக இருக்கிறார். தன்னுடன் தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடிய பாடகர் வி. பிரதீப் குமாரை மணந்தார்.
இவர், வித்தியாசாகர் இசையில் "சத்யம்" , "கொச்சி ராஜாவு" என்ற படங்களிலும், ஓசப்பச்சான் இசையில் 'தஸ்கரவீரன்' படத்திலும் 'கனா கண்டே'வில் இடம் பெற்ற பிரபலமான மூலை திருகும் போன்ற பாடல்களையிம் பாடியுள்ளார். கருவறைப் பூக்கள் (இந்தியாவில் திருநங்கைகள் மக்கள் பற்றிய முதல் திரைப்படம்) படத்தில் இடம் பெற்ற "சோகத்தை சொல்லி அழ" என்ற பாடலையும் பாடியுள்ளார்.[2]
சமீபத்தில் ஆனந்தம் ஆனந்தமே.. படத்தின் தெலுங்கு பதிப்பான சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு" படத்தில் "ஆறடுகுலு உண்டாடா" என்ற பாடலைப் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arts / Music : The Pancham effect". 12 November 2010. Archived from the original on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
- ↑ "Karuvarai Pookkal Songs – T.A.Thamas – Karuvarai Pookkal Tamil Movie Songs – Oosai.com – A Sound of Tamil Music – An Online Tamil songs Portal, Carries more than 4600 Tamil Movie Songs Online". Oosai.com. Archived from the original on 3 October 2012. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.