கல்யாண் சிங் கல்வி
கல்யாண் சிங் கல்வி (Kalyan Singh Kalvi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் சனதா தளம் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டார். [1]
இராசத்தான் மாநிலத்தின் நாகௌர் மாவட்டத்தில் உள்ள கல்வி கிராமத்தில் இவர் பிறந்தார். பைரோன் சிங் செகாவத்து முதல்வராக இருந்த காலத்தில் இராசத்தான் அரசில் இவர் விவசாய அமைச்சராக இருந்தார். பின்னர், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்மர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஒன்பதாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திர சேகரின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். வி.பி. சிங் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சந்திர சேகர் அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். 1991 ஆம் ஆண்டில் கல்யாண் சிங் கவி அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சரானார். இறப்பதற்கு முன் சனதா தளம் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தார், மேலும் இராசத்தான் மாநிலத்தின் கிராமப்புறங்களிலும் இராசபுத்திர சமூகத்திலும் முக்கிய பிரபலமானவராகத் திகழ்ந்தார்.
இவரது மகன், லோகேந்திர சிங் கல்வி, இராசபுத்ர அமைப்பான கர்னி சேனாவின் தலைவராக உள்ளார், மேலும் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பகுசன் சமாச் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டவராக செயல்படுகிறார். [2] இவரது பேரன், பவானி கல்வி, விளையாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய போலோ வீரர் ஆவார். மற்றொரு பேரன், பிரதாப் கல்வி, ஒரு புகழ்பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். மேலும் இவர் இராசபுத்ர சமாச்சை இணைக்கும் ஒரு சிறந்த தலைமையாகவும் திகழ்ந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members of 9th Lok Sabha". Parliament of India. Archived from the original on 2012-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02.
- ↑ "कभी भाजपा के बागी संग मिल राजनीति में उतरे थे लोकेंद्र सिंह कालवी, करणी सेना का वसुंधरा राजे से रहा है 36 का आंकड़ा". http://www.jansatta.com/rajya/rajasthan/jaipur/what-is-rajput-karni-sena-and-who-is-lokendra-singh-kalvi/240813/lite/.