கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில்
கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு குலசேகரமுடையார் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவிடம்: | கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | அம்பாசமுத்திரம் |
மக்களவைத் தொகுதி: | தென்காசி |
கோயில் தகவல் | |
மூலவர்: | குலசேகரமுடையார் |
தாயார்: | அறம்வளர்த்தநாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடிப்பூரம், சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டிய நாள்: | 1500 |
வரலாறு
தொகுபிற்கால பாண்டிய மன்னர் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் 16-ஆம் நூற்றாண்டில் கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குலசேகரமுடையார் கோயிலைக் கட்டினார்.[2]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் குலசேகரமுடையார், அறம்வளர்த்தநாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடிப்பூரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
நடராஜர் சிலை
தொகு1982-இல் களவாடப்பட்ட இக்கோயிலின் பஞ்சலோக நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்ததை, காவல்துறை சிலை தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.[4].[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆய்வு திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதாக பேட்டி
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் நடராஜர் சிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது
- ↑ 37 ஆண்டுகளுக்கு பின் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பியது எப்படி?